பாஜக ஆட்சி அமைக்க திமுக ஆதரவு தரும்.. சுப்பிரமணிய சுவாமியின் அதிரடி பேட்டி..!! - Seithipunal
Seithipunal


சமீபத்தில் தமிழகத்தில் நான் மட்டும் தான் திமுகவுக்கு எதிராக பேசி வருகிறேன். என்னை பார்த்தால் தான் திமுகவுக்கு எதிர்க்கட்சி போல் தெரிகிறது. ஸ்டாலின் உறுமினால் பயந்தும் பூனையாக தமிழக பாஜக செயல்படுகிறது. தமிழக பாஜகவை சினிமா கலாச்சாரம் சீரழித்து விட்டது என பாஜக மூத்த தலைவர் சுப்பிரமணியசாமி பகிரங்கமாக விமர்சனம் செய்திருந்தார். பாஜகவை சேர்ந்த மூத்த தலைவர் தமிழக பாஜகவை விமர்சிங் செய்தது பாஜகவினரிடையே பெரும் சலசலப்பை உண்டாக்கியது.

இந்த நிலையில் சுப்ரமணியசாமி தனியார் யூட்யூப் சேனலுக்கு அளித்த பேட்டியில் தேர்தலுக்குப் பின் திமுக பாஜக கூட்டணி அமையும் என தெரிவித்துள்ளார். இதுகுறித்து பேசிய அவர் "நான் அமைச்சராக இருந்த பொழுது திமுக ஆட்சியை கவிழ்க்க முடியாது என சொன்னார்கள் ஆனால் நான் சட்ட ஒழுங்கை காரணமாக வைத்து திமுக ஆட்சியை கவிழ்த்தேன். இதனால் தமிழகத்தில் ரத்த ஆறு ஓடும் என சொன்னார்கள் ஆனால் தமிழகத்தில் ஒரு சைக்கிள் கூட ஏரியவில்லை. 

அதன் பிறகு நடைபெற்ற தேர்தலில் திமுக படுதோல்வியை சந்தித்தது. தமிழக அரசை சரி செய்ய மத்திய அரசுக்கு ஐந்து நிமிடங்கள் போதும். ஆனால் எதிர்வரும் நாடாளுமன்ற தேர்தலில் பாஜகவுக்கு மெஜாரிட்டி கிடைக்காமல் போனால் திமுகவின் எம்பிக்களின் ஆதரவு வேண்டும் என மோடியும் அமித்ஷாவும் நினைக்கின்றனர். 

நாளைக்கு மோடி தமிழகத்திற்கு வருகை புரிந்தால் இங்குள்ள அரசியல் கட்சிகள் காலில் விழுந்து சால்வை போட்டு வரவேற்பார்கள். தமிழ்நாட்டில் உள்ளவர்களுக்கு இந்தி தெரியாது. மோடிக்கு ஆங்கிலம் அவ்வளவு முழுமையாக தெரியாது. தமிழகத்தில் பாஜக தான் எதிர்க்கட்சி என அவர்களே சொல்லிக் கொள்ளலாம்.

ஆனால் மற்றவர்கள் யாரும் சொல்வதில்லை. திமுகவினர் கூட பாஜகவை எதிர்க்கட்சியாக கருதவில்லை. நாளைக்கு பாஜகவும் திமுகவும் கூட்டணியில் இணையலாம். 

பாஜகவுடன் கூட்டணி அமைக்க திமுக தயாராக இருந்தால் இன்றைக்கே பாஜக இணைந்து கொள்ளும். முன்பு வாஜ்பாய் காலத்தில் திமுக பாஜக கூட்டணி அமைந்துள்ளது" எனத் தெரிவித்துள்ளார். பாஜக மூத்த தலைவர் சுப்பிரமணிய சுவாமியின் இத்தகைய பேச்சு தமிழக பாஜகவில் புயலை கிளப்பியுள்ளது. பாஜகவின் ஆதரவாளர்கள் சமூக வலைத்தளங்களில் சுப்பிரமணிய சுவாமிக்கு எதிராக கருத்து தெரிவித்து வருகின்றனர்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

SubramaniaSwamy said DMK wiil be support to form BJP govt in center


கருத்துக் கணிப்பு

இந்த கனமழையை தமிழக அரசு எதிர்கொண்ட விதம்...!



Advertisement

கருத்துக் கணிப்பு

இந்த கனமழையை தமிழக அரசு எதிர்கொண்ட விதம்...!




Seithipunal
--> -->