அண்ணா நகர் சிறுமி வழக்கு: தமிழக அரசின் தலையில் இடியை இறக்கிய உச்சநீதிமன்றம்!
supreme court judgement chennai anna nagar child case TNGovt
அண்ணா நகர் சிறுமி பாலியல் வன்கொடுமை வழக்கில், உச்சநீதிமன்றம் சிறப்பு புலனாய்வு குழுவை அமைத்து விசாரணையை கண்காணிக்க உத்தரவிட்டுள்ளது.
சென்னை உயர்நீதிமன்றத்தின் உத்தரவுப்படி வழக்கை சிபிஐக்கு மாற்றியதை எதிர்த்து, தமிழ்நாடு அரசு மேல்முறையீடு மனு தாக்கல் செய்த நிலையில், இந்த வழக்கின் புலன் விசாரணை டிஐஜி சுரேஷ் குமார் தாக்கூர் தலைமையிலான சிறப்பு குழுவினரால் மேற்கொள்ளப்படும் என உச்சநீதிமன்றம் அறிவித்தது.
விசாரணை குழுவில் தமிழ்நாடு கேடரைச் சேர்ந்த, ஆனால் தமிழ்நாட்டைச் சாராத இரண்டு பெண் ஐபிஎஸ் அதிகாரிகள் சேர்க்கப்பட வேண்டும் என்று உத்தரவிடப்பட்டுள்ளது.
மேலும், நாள்தோறும் புலனாய்வு செய்து, வாரந்தோறும் சென்னை உயர்நீதிமன்றத்தில் விசாரணை அறிக்கையை தாக்கல் செய்ய வேண்டும் என உச்சநீதிமன்றம் அறிவுறுத்தியது.
ஒரு வாரத்திற்கு ஒரு முறை விசாரணை என்ன கட்டத்தில் இருக்கிறது என்ற விவரத்தை உயர்நீதிமன்றத்தில் சிறப்பு விசாரணை குழு சமர்ப்பிக்க வேண்டும் என உச்ச நீதிமன்ற உத்தரவு
பாதிக்கப்பட்ட சிறுமியின் தாயாருக்காக ஆஜராகிய வழக்கறிஞர் சம்பத் குமாருக்கு ரூ.75 ஆயிரம் செலவை தமிழ்நாடு அரசு வழங்க வேண்டும் என உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
English Summary
supreme court judgement chennai anna nagar child case TNGovt