#BigBreaking: மசூதிகள் இருக்கும் இடத்தில், இந்து கோயில் - உச்சநீதிமன்ற வழக்கு! உள்ளே வந்த திமுக, விசிக!
Supreme Court Mosque case DMK VCK
"மசூதிகள் இருக்கும் இடத்தில், இந்து கோயில்கள் இருந்தது என கூறி புதிதாக தாக்கல் செய்யும் வழக்குகளை எந்த நீதிமன்றமும் விசாரிக்கக் கூடாது" என்று, உச்சநீதிமன்றம் அதிரடி உத்தரவு பிறப்பித்துள்ளது.
இந்தியாவில் 1947 ஆகஸ்ட் 15-ந்தேதிக்குப் பின்பு வழிபாட்டு தலங்களை மாற்ற முடியாது என்ற "வழிபாட்டு தலங்கள் (சிறப்பு ஏற்பாடுகள்) சட்டம், 1991" மீது சுப்பிரமணியசுவாமி மற்றும் பலர் வழக்கு தொடர்ந்துள்ளனர்.
இது தொடர்பான வழக்கு இன்று தலைமை நீதிபதி சஞ்சீவ் கன்னா தலைமையிலான அமர்வில் விசாரணைக்கு வந்தது. அப்போது நீதிபதிகள், இந்த சட்டத்தை எதிர்த்து பல வழக்குகள் பதியப்பட்டுள்ளதாக தெரிவித்தனர். மேலும், அவர்கள் பிறப்பித்த உத்தரவின் காரணமாக இனி,
* நாடு முழுவதும் பல்வேறு நீதிமன்றங்களில் தொடர்ந்து மனுக்கள் மீது இனி இடைக்காலமாக எந்த விசாரணையும் நடைபெறாது
* இந்த வழக்குகள் அனைத்தும் ஒன்றாக இணைத்து விசாரிக்கப்படும்.
* கோவில்-மசூதி தொடர்பான எந்த புதிய வழக்கும் தொடர முடியாது.
* மசூதிகளில் ஆய்வுகள் நடத்த கூறுவது போன்ற எந்த ஒரு புதிய மனுக்களையும் யாரும் தாக்கல் செய்ய இயலாது அவ்வாறு தாக்கல் செய்தாலும் அதன் மீது எந்த நீதிமன்றமும் எந்த முக்கிய உத்தரவுகளையும் பிறப்பிக்க முடியாது
இவ்விவகாரம் இன்னும் நீதிமன்றத்தில் நிலுவையில் இருப்பதால், தற்போது எந்த நீதிமன்றமும் புதிய வழக்குகளில் உத்தரவு பிறப்பிக்க முடியாது என்றும் தெரிவித்தனர்.
மேலும், "ஒரே வழக்கு நம் முன் நிலுவையில் இருக்கும் போது, வேறு நீதிமன்றங்கள் அதே விவகாரத்தை விசாரிப்பது ஏற்றுக்கொள்ளக்கூடியதா?" என்றும் நீதிபதிகள் கேள்வி எழுப்பியுள்ளனர்.
இதற்கிடையே, வழிபாட்டு தளங்கள் சட்டம் தொடர்பான உச்ச நீதிமன்ற வழக்கு விசாரணைகளில் தங்களையும் இணைக்க கோரி திமுக சார்பில் உச்சநீதிமன்றத்தில் இடையிட்டு மனு தாக்கல் செய்துள்ளது.
English Summary
Supreme Court Mosque case DMK VCK