ஆளுநர் ஆர்.என் ரவிக்கு எதிராக உச்சநீதிமன்றம் தீர்ப்பு; அனைத்து மாநில ஆளுநர்களுக்கும் எச்சரிக்கை பாடம் என்கிறார் சித்தராமையா ..! - Seithipunal
Seithipunal


தமிழ்நாடு மாநில ஆளுநர் R.N ரவியின் செயல்பாட்டிற்கு எதிராக உச்சநீதிமன்றம் வழங்கியுள்ள தீர்ப்பு, நாடு முழுவதும் உள்ள அனைத்து மாநில ஆளுநர்களுக்கும் எச்சரிக்கை பாடம் என்று கர்நாடக முதல்வர் சித்தராமையா கூறியுள்ளார். 

இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியுள்ளதாவது;

அரசியலமைப்பு சட்ட விதிமுறைகளுக்கு எதிராக செயல்பட்டு வரும் தமிழ்நாடு ஆளுநர் என்.ஆர்.ரவியின் செயல்பாடுகளுக்கு கண்டனம் தெரிவித்துள்ளதுடன், ஆளுநருக்கான அதிகாரம் என்ற பெயரில் ஒருதலை பட்சமாக எடுத்த தீர்மானங்களை ரத்து செய்து உச்சநீதிமன்றம் வழங்கியுள்ள தீர்ப்பு, தமிழ்நாடு ஆளுநருக்கு மட்டுமில்லாமல், நாட்டில் அனைத்து மாநில ஆளுநர்கள் மற்றும் அவர்களை பின்னால் இருந்து இயக்கி வரும் பிரதமர் மோடி தலைமையிலான பாஜ அரசுக்கு விடுத்துள்ள எச்சரிக்கை பாடம் என்று குறிப்பிட்டுள்ளார். 

அத்துடன், உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்பு ஆளுநரின் கடமைகளின் நோக்கத்தை தெளிவாக வரையறுத்து, இதனால் ஏற்படும் அனைத்து குழப்பத்தையும் நீக்கும் என்றும் தெரிவித்துள்ளார்.

இது குறித்து அவர் மேலும் குறிப்பிடுகையில், மாநில அரசால் நிறைவேற்றப்படும் மசோதாக்களுக்கு மூன்று மாதங்களுக்குள் கையெழுத்து போட வேண்டும் என்ற காலகெடுவையும் உச்சநீதிமன்றம் விதித்துள்ளமை  மூலம், இதுவரை இருந்த குழப்பங்களை நீக்கி, இந்த செயல்முறையை முடிக்க உச்ச நீதிமன்றம் வழிகாட்டியுள்ளது என்று சுட்டிக்காட்டியுள்ளார்.

மேலும், தமிழ்நாடு ஆளுநருக்கு எதிராக உச்ச நீதிமன்றம் வழங்கியுள்ள தீர்ப்பானது, மாநில அரசுக்கும் ராஜ்பவனுக்கும் இடையிலான தேவையற்ற மோதலை நிரந்தரமாக முடிவுக்குக் கொண்டுவரும் என்று தான் நம்புவதாக அவர் அறிக்கையிலோ குறிப்பிட்டுள்ளார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

Supreme Court verdict against Gorovernor RN Ravi Siddaramaiah says it is a warning lesson for all state governs


கருத்துக் கணிப்பு

பாஜக, காங்கிரஸ் கட்சியின் தமிழக தலைவர்கள் மாற்றம் குறித்த செய்தி...



Advertisement

கருத்துக் கணிப்பு

பாஜக, காங்கிரஸ் கட்சியின் தமிழக தலைவர்கள் மாற்றம் குறித்த செய்தி...




Seithipunal
--> -->