கனிமொழியை எதிர்க்கும் த.மா.கா வேட்பாளர் யார்? முதற்கட்ட பட்டியல் வெளியீடு.!! - Seithipunal
Seithipunal


தமிழ்நாட்டில் பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணியில் போட்டியிடும் 39 தொகுதிகளுக்கான கூட்டணி பங்கீடு நிறைவடைந்துள்ள நிலையில் பாஜக நேரடியாக 20 தொகுதிகளில் போட்டியிடுகிறது. அதேபோல ஜி கே வாசன் தலைமையிலான தமிழ் மாநில காங்கிரஸ் கட்சிக்கு மூன்று தொகுதிகள் ஒதுக்கப்பட்டுள்ளது. 

அதன்படி ஈரோடு, தூத்துக்குடி, ஸ்ரீபெரும்புதூர் ஆகிய மூன்று தொகுதிகளில் தமிழ் மாநில காங்கிரஸ் கட்சி தனிச் சின்னத்தில் போட்டியிடுகிறது. ஈரோடு மயிலாடுதுறை தஞ்சாவூர் ஆகிய மூன்று தொகுதிகளை ஜி கே வாசன் கேட்ட நிலையில் அதில் ஈரோடு மட்டுமே ஜி.கே வாசன் கேட்ட தொகுதி கிடைத்துள்ளது. 

இந்த நிலையில் செய்தியாளர்களை சந்தித்த தமிழ் மாநில காங்கிரஸ் கட்சியின் தலைவர் ஜி.கே வாசன் பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணியில் போட்டியிடும் தமிழ் மாநில காங்கிரஸ் கட்சி ஈரோடு தொகுதியில் விஜயகுமாரையும் ஸ்ரீபெரும்புதூர் தொகுதியில் வேணுகோபாலையும் வேட்பாளராக நிறுத்தியுள்ளது. தூத்துக்குடி தொகுதிக்கான வேட்பாளர் விரைவில் அறிவிக்கப்படுவார் என தெரிவித்துள்ளார். தூத்துக்குடி தொகுதியில் திமுக வேட்பாளராக அக்கட்சியின் துணைப் பொதுச் செயலாளர் கனிமொழி அறிவிக்கப்பட்டுள்ளார் என்பதை குறிப்பிடத்தக்கது.  


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Tamil Manila Congress 1st phase candidate list released


கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?



Advertisement

கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?




Seithipunal
--> -->