அது போன மாசம், இது இந்த மாசம் : ஆளுநரின் தேனீர் விருந்தில் தமிழக முதல்வர் ஸ்டாலின்.!
Tamil Nadu Chief Minister Stalin at Governor Tea Party
சுதந்திர தினம், குடியரசு தினம் மற்றும் புத்தாண்டு உள்ளிட்ட முக்கிய தினங்களில் கவர்னர் மாளிகையில் தேனீர் விருந்து நடைபெறுவது வழக்கம்.
இந்த வகையில் இன்று சுதந்திர தினத்தையொட்டி கிண்டியில் கவர்னர் ஆர்.என்.ரவி மாளிகையில் மாலை 5 மணி அளவில் தேனீர் விருந்து நடைபெற உள்ளது. தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இந்த தேனீர் விருந்தில் பங்கேற்கிறார். மேலும், அமைச்சர்கள் மற்றும் முக்கிய பிரமுகர்களும் கலந்து கொள்ள உள்ளனர்.
கடந்த தமிழ் புத்தாண்டு அன்று தமிழக கவர்னர் ஆர்.என்.ரவி மாளிகையில் தேனீர் விருந்து நடைபெற்றது. அப்போது முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தேனீர் விருந்தில் பங்கேற்கவில்லை. அமைச்சர்கள் மற்றும் முக்கிய பிரமுகர்களும் தேனீர் விருந்தை புறக்கணித்து இருந்தனர். தி.மு.க. கூட்டணி கட்சி தலைவர்களும் பங்கேற்கவில்லை.
அப்போது முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், நீட் மசோதாவை நீண்ட நாட்களாக கவர்னர் கிடப்பில் போட்டு வைத்திருந்ததன் காரணமாக தான் தேனீர் விருந்தை புறக்கணித்துள்ளோம் என்று விளக்கம் அளித்திருந்தார்.
English Summary
Tamil Nadu Chief Minister Stalin at Governor Tea Party