பத்திரிகையாளர்கள் நலவாரியத்தில் பிரதிநிதித்துவம் வழங்க வேண்டும் - அமைச்சரிடம் கோரிக்கை வைத்த தமிழ்நாடு பத்திரிகையாளர்கள் பாதுகாப்பு கூட்டமைப்பு.! - Seithipunal
Seithipunal


தமிழ்நாடு அரசு தலைமை செயலக அலுவலகத்தில் செய்தித் துறை அமைச்சர் சாமிநாதன் அவர்களை தமிழ்நாடு பத்திரிகையாளர்கள் பாதுகாப்பு கூட்டமைப்பின் மாநிலத் தலைவர் இளசை S கணேசன் தலைமையில் கூட்டமைப்பின் முக்கிய நிர்வாகிகள் அடங்கிய பத்திரிகையாளர்கள் குழு சந்தித்தது.

இந்த சந்திப்பில் "பத்திரிகையாளர்கள் நலவாரியம்" குறித்தும், தமிழ்நாடு பத்திரிகையாளர்கள் பாதுகாப்பு கூட்டமைப்பிற்கு “பத்திரிகையாளர்கள் நலவாரியத்தில்” பிரதிநிதித்துவம் வழங்குவது குறித்தும் வலியுறுத்தப்பட்டது.

மேலும் பத்திரிகையாளர்கள் பாதுகாப்பு கூட்டமைப்பின் 10 அம்ச கோரிக்கைகள் அடங்கிய கடிதத்தை மாண்புமிகு செய்தித் துறை அமைச்சர் திரு.சாமிநாதன் அவர்கள் பெற்றுக்கொண்டு உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்று உறுதி அளித்துள்ளார்.

இந்த சந்திப்பில் தமிழ்நாடு பத்திரிகையாளர்கள் பாதுகாப்பு கூட்டமைப்பின் மாநிலத் தலைவர் திரு.இளசை S கணேசன் (அறிஞர் அண்ணா தமிழ்நாடு பத்திரிகையாளர்கள் ஒருங்கிணைப்பு சங்கம்), பொருளாளர் திரு.ஆ.வீ.கன்னையா (அறிஞர் அண்ணா தமிழ்நாடு பத்திரிகையாளர்கள் ஒருங்கிணைப்பு சங்கம்), துணைத் தலைவர் திரு.D.M.தருமராஜா (ஜனநாயக அனைத்து பத்திரிகை உறவுகள் பாதுகாப்பு நலச் சங்கம்), துணைத் தலைவர் திரு.N.K.மூர்த்தி (ஆவடி பத்திரிகையாளர் மன்றம்), துணைத் தலைவர் முனைவர் திரு.தாமரை பூவண்ணன் (தமிழ்நாடு பத்திரிகை மற்றும் ஊடக பணியாளர்கள் சங்கம்), இணைச் செயலாளர் திரு.M.வடிவேல் (ஊடக உரிமை குரல் பத்திரிகையாளர்கள் பாதுகாப்பு சங்கம்), இணைச் செயலாளர் திரு.அ.ஐஸ்வரியன் (அறிஞர் அண்ணா  பத்திரிகையாளர்கள் மற்றும் ஊடகவிலாளர்கள் முன்னேற்ற சங்கம்), இணைச் செயலாளர் திரு.சே.சார்லஸ் (இந்திய சுதந்திர பத்திரிகையாளர் சங்கம்), பத்திரிகையாளர்கள் திரு.ஜான் மற்றும் பழனி கண்ணன் ஆகியோர் பங்கேற்றனர்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Tamil Nadu Journalists Protection Federation


கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?



Advertisement

கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?




Seithipunal
--> -->