தமிழக வெற்றி கழக மாநாடு : பந்தல் கால் நடும் விழாவில் விஜய் காணொலியில் பங்கேற்பு? - Seithipunal
Seithipunal


தமிழக வெற்றி கழகத்தின்  முதல் மாநில மாநாடு அடுத்த மாதம் 27-ம் தேதி விக்கிரவாண்டி வி.சாலையில்  மாலை 4 மணிக்கு நடைபெறும் என்று  நடிகர் விஜய் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளார்.

இதற்கான பணிகள் தீவிரப்படுத்தப்பட்டு வரும் நிலையில், மாநாட்டுக்கு வரும் தொண்டர்கள் மற்றவர்களுக்கு முன் மாதிரியாக நாகரீகமான முறையில் வரவேண்டும் என்றும்,  குறிப்பாக மாநாட்டுக்கு பெண்களை பாதுகாப்பாக அழைத்து வர வேண்டும். அவர்களது பாதுகாப்பை மாவட்ட பொறுப்பாளர்கள் உறுதி செய்ய வேண்டும் என்று தொண்டர்களுக்கு தவெக கட்சி சார்பில் உத்தரவு பிறப்பிக்கப்பட்டு உள்ளது.

மேலும் இந்த மாநாட்டில் கட்சி கொடியின் அர்த்தம் மற்றும் மற்றும் கட்சியின் கொள்கைகளை விஜய் அறிவிப்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இந்த நிலையில் நாளை காலை 8 மணிக்கு தமிழக வெற்றிக் கழகத்தின் மாநாடு பூஜை நடைபெறும் என கட்சியின் பொதுச்செயலாளர் புஸ்ஸி ஆனந்த் தெரிவித்துள்ளார். இதனைத் தொடர்ந்து இந்த பூஜையில் விஜய் பங்கேற்பார் என்று தகவல் வெளியான நிலையில், அவர் காணொலி மூலம் மட்டுமே பங்கேற்க வாய்ப்புள்ளதாக தமிழக வெற்றிக் கழகத்தின் தலைமை வட்டாரங்கள் தரப்பில் தகவல்கள் வெளியாகியுள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Tamilaga vetri kazhagam conference vijay participation in the video at the pandal kal ceremony


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->