அண்ணாமலைக்கு மாற்று ஏற்பாடு! எச் ராஜா தலைமையில் 6 பேர் கொண்ட குழு! பாஜக தலைமை அதிரடி! - Seithipunal
Seithipunal


பாஜக மாநில தலைவர் அண்ணாமலை வெளிநாடு சென்ற உள்ள நிலையில், கட்சியின் பணிகளை ஒருங்கிணைக்க குழு ஒன்று தற்போது அமைக்கப்பட்டுள்ளது. 

எச் ராஜா தலைமையில் ஐந்து உறுப்பினர்களுடன் தமிழக பாஜக ஒருங்கிணைப்பு குழு அமைக்கப்பட்டுள்ளது. 

இந்த ஆறு பேர் கொண்ட குழுவின் ஒருங்கிணைப்பாளராக எச் ராஜா செயல்படுவார் என்றும் பாஜக தலைமை அறிவிப்பு வெளியிட்டுள்ளது.

இந்த குழுவில் சக்கரவர்த்தி, கனகசபாபதி, முருகானந்தம், ராம சீனிவாசன், எஸ்ஆர் சேகர், ஆகிய 5 பேர் உறுப்பினராக செயல்படுவார்கள் என்றும் பாஜக வெளியிட்டுள்ள அந்த அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

பாஜக மாநில தலைவர் அரசியல் படிப்பு படிப்பதற்காக மூன்று மாதங்கள் லண்டன் சென்றுள்ள நிலையில், தற்போது இந்த ஒருங்கிணைப்பு குழு அறிவிக்கப்பட்டுள்ளது. 

அவர் லண்டனில் படிப்பை முடித்து வந்த பிறகு மீண்டும் பாஜக மாநில தலைவராக பொறுப்பை தொடங்குவார் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது. 

ஏற்கனவே இந்த மூன்று மாத காலத்தில் இடைக்கால தலைவர் யாரேனும் அறிவிக்கப்படுவார்கள் என்று எதிர்பார்த்த நிலையில்,  அதற்கு மாற்றாக கட்சியின் பணிகளை ஒருங்கிணைக்க குழு ஒன்று, தற்போது எச் ராஜா தலைமையில் அமைக்கப்பட்டு அறிவிப்பு வெளியாகி உள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Tamilnadu BJP Annamalai H Raja New Committee


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->