''பெரியாரை சிறுமைப்படுத்துபவர்களுக்கு மக்கள் தண்டனை கொடுத்துள்ளார்கள்'' என நாதகவை விமர்சித்த தமிமுன் அன்சாரி..!
Tamimun Ansari criticized the Naam Tamilar Party
ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலில் திமுக அபார வெற்றி பெற்றதற்கு மனிதநேய ஜனநாயக கட்சியின் தலைவர் தமிமுன் அன்சாரி வாழ்த்து தெரிவித்துள்ளார்.
அத்துடன் அவர், பெரியாரை சிறுமைப்படுத்துபவர்களை மக்கள் தண்டித்துள்ளனர் என்றும் நாம் தமிழர் கட்சியை விமர்சித்துள்ளார். இதுகுறித்து தமிமுன் அன்சாரி கூறுகையில், " பெரியாருடைய மண்ணில் அவரை சிறுமைப்படுத்துபவர்களை ஒரு எல்லைக்கோட்டில் வைத்து மக்கள் தண்டனை கொடுத்திருக்கிறார்கள்.
பெரியார் பிறந்து வளர்ந்த மண்ணில் திராவிட மாடல் அரசுக்கு கிடைத்துள்ள மற்றொரு 'பெரியார் விருதாக' இதை கருதுகிறோம்" என்று குறிப்பிட்டுள்ளார்.
English Summary
Tamimun Ansari criticized the Naam Tamilar Party