#BREAKING || தமிழகம் முழுவதும் உள்ள அனைத்து டாஸ்மாக் கடைகளிலும்.... சற்றுமுன் தமிழக அரசு பிறப்பித்த அதிரடி உத்தரவு.!
TASMAC MASK MUST JAN
மாஸ்க் அணிந்து வருபவர்களுக்கு மட்டுமே மது விற்பனை செய்யப்படும் என்று, தமிழக அரசு தெரிவித்துள்ளது.
தமிழக அரசால் நடத்தப்படும் டாஸ்மார்க் மதுபான கடைகளில், நோய்த்தொற்று பரவலை கட்டுப்படுத்தும் விதமாக, முக கவசம் அணிந்து வருபவர்களுக்கு மட்டுமே மது விற்பனை செய்யப்படும் என்ற ஒரு உத்தரவை, சற்று முன்பு தமிழக அரசு வெளியிட்டு உள்ளது.
மேலும் ஒரு மதுபான சில்லறை விற்பனை கடைகளில் வாடிக்கையாளர்கள் கூட்டமாக இருக்கக் கூடாது என்றும் உத்தரவிட்டுள்ளது.
இரண்டு வாடிக்கையாளர்களுக்கு இடையே ஆறு அடி தூர சமூக இடைவெளியை கடைபிடிக்க வேண்டும் என்றும் தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.
ஒரே நேரத்தில் ஐந்து பேருக்கு மேல் கடையில் அனுமதிக்கக் கூடாது என்றும் தமிழக அரசு அந்த உத்தரவில் தெரிவித்துள்ளது.
டாஸ்மாக் மதுபானக் கடைகளில் நோய்த்தொற்று பரவலை கட்டுப்படுத்தும் கட்டுப்பாடுகளை பின்பற்றுவது குறித்து, தமிழக அரசு அறிவுரைகளை வழங்கி உத்தரவிட்டுள்ளது.