1 நிமிடத்திற்கு 1 கோடி ரூபாய் கடன் வாங்கும் காங்கிரஸ் ஆளும் மாநில அரசு! பாஜக கடும் கண்டனம்!
telangana congress govt BJP Condemn
தெலங்கானா மாநில அரசு கடன் வாங்கும் முறையை தொடர்ந்து கடைப்பிடிப்பதால், மாநிலத்தின் நிதிசார் நிலைமை கவலைக்கிடமாக உள்ளது என்று பாஜக கடுமையாக விமர்சித்துள்ளது.
தெலங்கானா சட்டப்பேரவையில் நடைபெற்ற பட்ஜெட் விவாதத்தில் பேசிய பாஜக மாநில தலைவர் மகேஷ்வர் ரெட்டி, "ரேவந்த் ரெட்டி தலைமையிலான அரசு தினமும் ரூ.1,700 கோடி கடன் பெறுவதன் மூலம், மாநிலத்தின் மொத்தக் கடன் ரூ.8.6 லட்சம் கோடியை கடந்துள்ளது. இது தனிநபர் கடன் சுமையையும் ரூ.2.27 லட்சம் வரை உயர்த்தியுள்ளது," எனக் குற்றம்சாட்டினார்.
மேலும், "ஒரு நிமிடத்துக்கு ஒரு கோடி ரூபாய் கடனாக பெறப்படும் நிலையில், இந்த அரசின் பொருளாதாரக் கையாளுதல் மோசமாகியுள்ளது. மத்திய அரசு மாநிலங்களுக்கான வரிப் பகிர்வை 32% இலிருந்து 42% ஆக அதிகரித்திருந்தாலும், மாநில அரசு கடன் போக்கை நிறுத்தவில்லை," எனவும் அவர் தெரிவித்தார்.
இதற்கு பதிலளித்த காங்கிரஸ் எம்.பிக்கள், "தெலங்கானாவுக்கு புதிய திட்டங்கள், நிதியுதவிகள் ஆகியவை வழங்கப்படாமல் பாஜக அரசு பின்வாங்கியுள்ளது" எனக் கூறினர்.
இதற்கு மறுப்புரையாக மகேஷ்வர் ரெட்டி, "தங்கள் தவறுகளை மறைக்க, காங்கிரஸ் அரசு மக்களை திசைதிருப்ப முயல்கிறது" எனக் குற்றம்சாட்டினார்.
English Summary
telangana congress govt BJP Condemn