கருணாநிதி வீட்டிற்கு சென்ற தெலுங்கானா ஆளுநர் தமிழிசை சௌந்தரராஜன்.. காரணம் என்ன தெரியுமா.? - Seithipunal
Seithipunal


மறைந்த முன்னாள் தமிழக முதலமைச்சர் கருணாநிதியின் மனைவியும், முதல்வர் ஸ்டாலினின் அம்மாவுமான தயாளு அம்மாவை தெலுங்கானா ஆளுநரும், புதுச்சேரி துணை நிலை ஆளுநர் தமிழிசை சவுந்தரராஜன் மரியாதை நிமிர்த்தமாக சந்தித்து உடல் நலம் விசாரித்துள்ளார்.  

தமிழகத்தில் தாமரை மலர்ந்தே தீரும் எனக் கூறி பிரபலமான அரசியல்வாதியாக இருந்தவர் தமிழிசை சௌந்தரராஜன். அதன்பின்னர் பாஜக மேலிடம் அவருக்கு தெலங்கானா ஆளுநராகவும், புதுச்சேரி துணை நிலை ஆளுநர் பொறுப்பும் வழங்கப்பட்டது. ஆளுநராக தமிழிசை சௌந்தரராஜன் நியமிக்கப்பட்டாலும் அனைவரிடத்திலும் எளிமையாகவே பழகி வந்தார். 

இந்த நிலையில், இன்று கிருஷ்ண ஜெயந்தியை முன்னிட்டு கோபாலபுரம் கோயிலுக்கு சென்ற அவர் அங்கு முதல்வர் ஸ்டாலினின் சகோதரியை சந்தித்து கோபாலபுரம் வீட்டுக்கும் சென்று வந்துள்ளார். அப்போது, தயாளு அம்மாளிடம் உடல் நலம் குறித்து விசாரித்தார்.

இது குறித்து தெலுங்கானா மாநில ஆளுநரும், புதுச்சேரி துணைநிலை ஆளுநருமான தமிழிசை சவுந்தரராஜன் வெளியிட்டுள்ள டுவிட்டர் பதிவில், கிருஷ்ண ஜெயந்தியை முன்னிட்டு கோபாலபுரம் கிருஷ்ணர் கோயில் சென்றேன். திரும்பும்போது தமிழக முதல்வர் அண்ணன் திரு.மு.க.ஸ்டாலின் அவர்களின் சகோதரி திருமதி.தமிழ்ச்செல்வி அவர்களை சந்தித்தேன். மரியாதை நிமித்தமாக இல்லத்திற்கு சென்று  திருமதி.தயாளு அம்மாளை சந்தித்து உடல் நலம் விசாரித்தேன்.

இதற்கு முன்பு மாண்புமிகு பாரதப் பிரதமர் திரு.நரேந்திர மோடி அவர்களுடன், கலைஞர் அவர்களின் உடல் நலம் விசாரிக்க  இதே இல்லத்திற்கு நான் வந்த நினைவுகளை பகிர்ந்து கொண்டேன் என தெரிவித்துள்ளார். 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Telungana governor thamizhisai meet TN CM MK Stalin mother


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->