தமிழரின் தலையில் கடனை ஏற்றியது தான் அதிமுகவின் சாதனை.!! ஈ.பி.எஸ்.,க்கு தங்கம் தென்னரசு பதிலடி.!! - Seithipunal
Seithipunal


தமிழ்நாடு அரசின் 2024-2025ம் நிதியாண்டிற்கான பட்ஜெட் இன்று சட்டபேரவையில் நிதியமைச்சர் தங்கம் தென்னரசு தாக்கல் செய்தார். அதனை எதிர்க்கட்சி தலைவரும் அதிமுக பொதுச் செயலாளருமான எடப்பாடி பழனிச்சாமி விமர்சனம் செய்திருந்தார்.

இந்த விமர்சனத்திற்கு நிதியமைச்சர் தங்கம் தென்னரசு "மக்களுக்கு பயன் தரும் என மக்களவைத் தேர்தலில் தமிழ்நாடு மக்கள் சரியான தீர்ப்பு எழுதுவார்கள்.

மக்களவைத் தேர்தலில் திமுக கூட்டணிக்கு வெற்றியை மக்கள் பரிசளித்து எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி பதில் அளிப்பார்கள். தமிழ்நாட்டின் கடனை அடைக்கும் வழிகளையும், வருவாயைப் பெருக்கும் வழிகளையும் திமுக அரசு செய்து கொண்டிருக்கிறது;

கடமையைச் செய்யத் தவறிக் தமிழ்நாட்டின் கடன் சுமை தொடர்ந்து ஏறிக்கொண்டே போனதுதான் கடந்த பத்தாண்டுகால அதிமுக அரசின் சாதனை.

பத்தாண்டு ஆட்சிகளில் கடன் சுமையைப் போக்குவதற்குப் பதிலாக ஒவ்வொரு தமிழரின் தலையிலும் கடனை ஏற்றியதுதான் அதிமுகவின் சாதனை” என எடப்பாடி பழனிசாமி விமர்சனத்திற்கு நிதியமைச்சர் தங்கம் தென்னரசு பதிலடி கொடுத்துள்ளார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

Thangam thennarasu response to EPS comment on tnbudget


கருத்துக் கணிப்பு

மத்திய அரசின் பட்ஜெட் அறிவிப்புகள்!



Advertisement

கருத்துக் கணிப்பு

மத்திய அரசின் பட்ஜெட் அறிவிப்புகள்!




Seithipunal
--> -->