"ஓசி டிக்கெட்ல தானே பயணம் பண்றீங்க" அமைச்சர் பாணியில் அசிங்கப்படுத்திய கல்லூரி மாணவர்கள்!
Chennai Osi Ticket Woman College student
தமிழக அரசுப் பேருந்துகளில் பெண்களுக்கு இலவசப் பயணம் என்ற திட்டம் நடைமுறையில் உள்ளது. இந்நிலையில், வடபழனி அருகே அரசுப் பேருந்தில் இளைஞர்கள் சிலர் பெண்களை "ஓசி டிக்கெட்ல தானே பயணம் பண்றீங்க" எனக் கூறி சீட்டிலிருந்து எழச் சொன்னதால் பரபரப்பு ஏற்பட்டது.
ஐயப்பன் தாங்கலில் இருந்து பிராட்வே நோக்கிச் சென்ற பேருந்தில் நடந்த இந்த சம்பவத்தில், இளைஞர்கள் பெண்களிடம் ஆபாசமாக பேசியதாகக் கூறப்படுகிறது. இருக்கையில் அமர்ந்திருந்த வயதானவர்கள் மற்றும் பெண்களை எழுப்பிவிட்டு, அந்த இருக்கைகளில் இளைஞர்கள் அமர்ந்தனர். இதற்கு எதிர்ப்பு தெரிவித்த பெண்களிடம் இளைஞர்கள் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.
இந்த வீடியோ சமூக வலைத்தளங்களில் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. பெண்களை இழிவுபடுத்தும் வகையில் பேசிய இளைஞர்களுக்கு எதிராக பலரும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.
ஏற்கனவே திமுக அமைச்சர் பொன்முடி இதேபோல் ஓசில தான போறிங்க என்று அசிங்கப்படுத்தி பேசியது பல்வேறு தரப்பிலும் கடும் கண்டான் ஆளாக்கியது குறிப்பிடத்தக்கது.
English Summary
Chennai Osi Ticket Woman College student