விராட்டின் முக்கிய சாதனையை முறியடித்த கேன் வில்லியம்சன்! - Seithipunal
Seithipunal


நியூசிலாந்து வீரர் கேன் வில்லியம்சன் ஒருநாள் கிரிக்கெட் வரலாற்றில் அதிவேகமாக 7 ஆயிரம் ரன்களை கடந்த இரண்டாவது வீரர் என்ற சாதனையைப் படைத்துள்ளார்.

பாகிஸ்தானில் நடைபெற்று வரும் முத்தரப்பு போட்டியில் நியூசிலாந்து மற்றும் தென் ஆப்பிரிக்கா அணிகள் மோதின.

முதலில் ஆடிய தென் ஆப்பிரிக்கா அணி 304 ரன்கள் குவித்தது. பின்னர் 305 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களம் இறங்கிய நியூசிலாந்து அணி கேன் வில்லியம்சனின் அதிரடி ஆட்டத்தால் வெற்றி பெற்றது. வில்லியம்சன் 133 ரன்கள் எடுத்து ஆட்டமிழக்காமல் இருந்தார்.

நியூசிலாந்து அணி வெற்றி இலக்கை நெருங்கியபோது வில்லியம்சன் 6,997 ரன்கள் எடுத்திருந்தார். வெற்றிக்கு ஒரு ரன் தேவைப்பட்ட நிலையில் வில்லியம்சன் பவுண்டரி அடித்து அணியை வெற்றி பெறச் செய்தார். இதன் மூலம் 7,000 ரன்களை கடந்தார்.

167 ஒருநாள் போட்டிகளில் விளையாடியுள்ள வில்லியம்சன் 159 இன்னிங்ஸில் 7,000 ரன்களை கடந்துள்ளார். இதன்மூலம் அதிவேகமாக 7,000 ரன்களை கடந்த இரண்டாவது வீரர் என்ற சாதனையை படைத்துள்ளார். விராட் கோலியும் 159 இன்னிங்ஸில் 7,000 ரன்களை கடந்துள்ளார். அவரை பின்னுக்குத் தள்ளி வில்லியம்சன் இரண்டாவது இடத்தைப் பிடித்துள்ளார்.

150 இன்னிங்ஸில் 7,000 ரன்களைக் கடந்து ஹசிம் அம்லா முதலிடத்தில் உள்ளார். ஏபி டி வில்லியர்ஸ் 166 இன்னிங்ஸில் கடந்து நான்காவது இடத்தில் உள்ளார்.
 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

ViratKohli Kane Williamson  


கருத்துக் கணிப்பு

மத்திய அரசின் பட்ஜெட் அறிவிப்புகள்!



Advertisement

கருத்துக் கணிப்பு

மத்திய அரசின் பட்ஜெட் அறிவிப்புகள்!




Seithipunal
--> -->