தமிழகம் வரும் கர்நாடக துணை முதல்வருக்கு எதிர்ப்பு; டெல்டாவில் போராட்டம்; பாரதிய ஜனதா அறிவிப்பு..! - Seithipunal
Seithipunal


கர்நாடக துணை முதல்வர் சிவக்குமார் தொகுதி மறுசீரமைப்பு கூட்டத்தில் கலந்துகொள்வதற்காக எதிர்வரும் 22-ஆம் தேதி தமிழகத்திற்கு வரவுள்ளார். அப்போது  அவருக்கு எதிர்ப்பு தெரிவித்து டெல்டாவில் போராட்டம் நடத்த உள்ளதாக பா.ஜ., மாநிலப் பொதுச் செயலர் கருப்பு முருகானந்தம் தெரிவித்துள்ளார்.

இது குறித்து அவர் தஞ்சாவூரில் நிருபர்களிடம் கூறியதாவது:

டாஸ்மாக் மதுபான நிறுவனத்தில், 1,000த்துக்கும் அதிகமான கோடி ரூபாய் முறைகேடு நிகழ்ந்துள்ளதாக அமலாக்கத்துறை அறிவித்துள்ளது. இதில், தமிழக முதல்வருக்கும், அவரது குடும்பத்திற்கும் தொடர்பு உள்ளதாக சந்தேகிக்கப்படுகிறது. இதற்கு தமிழக முதல்வரும், அமைச்சர் செந்தில்பாலாஜியும் பொறுப்பேற்று, பதவி விலக வேண்டும். இதை வலியுறுத்தி, பா.ஜ., சார்பில், மிகப்பெரும் போராட்டங்கள் நடத்த உள்ளோம். என்று தெரிவித்துள்ளார்.

அத்துடன், 'டெல்டா பகுதியினர் காவிரி நீரை பெரிதும் நம்பி இருக்கின்றனர். ஆனால், காவிரியின் குறுக்கே எக்காரணத்தைக் கொண்டும், அணை கட்ட விடமாட்டோம். 'மேகதாதுவில், அணை கட்டியே தீருவோம்' என, கர்நாடக துணை முதல்வர் சிவக்குமார் உறுதியாகக் கூறி வருகிறார்.' இதற்கு எதிர்ப்பு தெரிவிக்கவுள்ளதாக கூறியுள்ளார்.

எதிர்வரும் 22-ஆம் தேதி, தொகுதி மறுசீரமைப்பு எதிர்ப்பு கூட்டத்தில், பங்கேற்பதற்காக தமிழகத்திற்கு கர்நாடக துணை முதல்வர் வருகிறார். அப்போது அவருக்கு எதிர்ப்பு தெரிவிக்கவுள்ளோம்.

 தமிழக விவசாயிகள் மற்றும் பா.ஜ., சார்பில், டெல்டா மாவட்டங்களில், சிவக்குமாரின் உருவபொம்மை எரிப்பு மற்றும் கருப்புக்கொடி போராட்டங்களை நடத்த உள்ளோம் என கருப்பு முருகானந்தம் கூறியுள்ளார்.

அத்துடன், தமிழக அரசின் பட்ஜெட், தேர்தல் அறிக்கையை போன்று உள்ளதாகவும், தேர்தல் வாக்குறுதிகள் எப்படி ஏமாற்றப்பட்டதோ, அது போல தான் இந்த பட்ஜெட் அறிக்கையும் இருந்தது என அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

The BJP has announced that it will protest in the Delta against the Karnataka Deputy Chief Minister is coming to Tamil Nadu


கருத்துக் கணிப்பு

மத்திய அரசின் பட்ஜெட் அறிவிப்புகள்!



Advertisement

கருத்துக் கணிப்பு

மத்திய அரசின் பட்ஜெட் அறிவிப்புகள்!




Seithipunal
--> -->