பரிதாப பலி! இஸ்ரேல் காசாவில் வான்வழி தாக்குதல்....! 200க்கும் மேற்பட்டோர் கொல்லப்பட்டனர்...!
Tragic death toll Israel airstrikes in Gaza More than 200 killed
இஸ்ரேல் படையினர் போர் நிறுத்த ஒப்பந்தத்தை மீறி தெற்கு மற்றும் மத்திய காசா பகுதியிலுள்ள கான் யூனிஸ், ராபா, மவாரி, அல் தராஜ் உள்ளிட்ட பகுதிகளில்த் தாக்குத வான்வழிதாக்குதலில் ஈடுபட்டுள்ளனர். இந்த தாக்குதல்களில் சுமார் 200க்கும் மேற்பட்டோர் பரிதாபமாக கொல்லப்பட்டனர்.

இதனால் அங்கு மக்கள் அச்சத்துடனும் நாடுமுழுவதும் பதற்றமான சூழலும் நிலவுகிறது.இதில் ஆயிரக்கணக்கானோர் இடம்பெயர்ந்த குடியிருப்புப் பகுதிகளைத் தாக்கியதால்,இறந்தவர்களில் பலர் குழந்தைகள் என்று பாலஸ்தீன சுகாதார அதிகாரிகள் தெரிவித்தனர்.
இந்தக் கொடுரமான தாக்குதல்களை நடத்துவதற்கு முன்பு இஸ்ரேல், அமெரிக்கா டிரம்ப் நிர்வாகத்துடன் கலந்து ஆலோசித்ததாக வெள்ளை மாளிகை செய்தித் தொடர்பாளர் உறுதிப்படுத்தினார். இதில் சிரியா, லெபனான் உள்ளிட்ட பல்வேறு பகுதியில் இஸ்ரேல் ராணுவம் தீவிர தாக்குதல் நடத்தி வருகிறது.
இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு:
இது குறித்து, இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு கூறியதாவது,"மீண்டும் போர் துவங்கியுள்ளது. பிணைக் கைதிகளை விடுவிக்க மறுப்பது மற்றும் போர் நிறுத்த நடவடிக்கைகளுக்கு எதிராக ஹமாஸ் படையினர் ஈடுபட்டதால் மீண்டும் தாக்குதலை தொடங்கியுள்ளேன்.
பிணைக் கைதிகள் விடுவிப்பில் ஹமாஸ் அமைப்பு போர் நிறுத்த விதிமுறைகளை மீறியுள்ளது. கூடுதல் ராணுவப் படைகளுடன் ஹமாஸ்க்கு எதிராக இஸ்ரேல் போராடும்" எனத் தெரிவித்திருந்தார்.
English Summary
Tragic death toll Israel airstrikes in Gaza More than 200 killed