அரசு பள்ளி ஆசிரியையிடம் தங்க சங்கிலி பறிப்பு விவகாரம்.. சட்டப்பேரவையில் காரசார விவாதம்!  - Seithipunal
Seithipunal


புதுச்சேரி அரசு பள்ளி ஆசிரியையிடம் தங்க சங்கிலி பறிக்க 4 பேர் கொண்ட முயற்சி செய்திருப்பதை பார்க்கும் பொழுது மிகப்பெரிய அச்சத்தை ஏற்படுத்தி உள்ளது என சட்டமன்ற உறுப்பினர் வைத்தியநாதன் தெரிவித்துள்ளார்.

புதுச்சேரி அரசு 15 ஆவது சட்டப்பேரவையின் 6 ஆவது கூட்டத்தொடரில் மாண்புமிகு முதலமைச்சரின் 2025-2026 ஆம் ஆண்டிற்கான வரவு செலவு திட்ட உரையின் மீதான விவாதத்தின் போது  பூஜ்ய நேரத்தில் சட்டமன்ற உறுப்பினர் திரு. மு. வைத்தியநாதன் அவர்கள் பேசியதாவது.     புதுச்சேரி அரசு பள்ளி ஆசிரியையிடம் தங்க சங்கிலி பறிக்க 4 பேர் கொண்ட முயற்சி செய்திருப்பதை பார்க்கும் பொழுது மிகப்பெரிய அச்சத்தை ஏற்படுத்தி உள்ளது. 

புதுச்சேரி காட்டுக்குப்பம் கிராமத்தை சேர்ந்த விஜயலட்சுமி(37). பாகூர் அரசு துவக்கப் பள்ளியில் ஆசிரியராக பணியாற்றி வருகிறார். கடந்த 5ம் தேதி இவர் பணி முடித்து தனது இருசக்கர வாகனத்தில் வந்து கொண்டிருந்தார். கன்னியகோயில் சாலையில் இரண்டு பைக்கில் வந்த நான்கு நபர்களில் ஒருவர் விஜயலட்சுமி கழுத்திலிருந்து தங்க சங்கிலியை பறிக்க முன்றனர். இதனை கண்ட  விஜயலட்சுமி அவரது கையைத் தட்டி விட்டு கீழே விழுந்தார். உடனே அவர் கூச்சலிட  அப்பகுதியில் இருந்தவர்கள் ஓடிவந்ததை தொடர்ந்து  நான்கு பேரும் தப்பிச் சென்றனர்.

இது அங்குள்ள சிசிடிவி கேமிராவில் பதிவாகியுள்ளது. இது குறித்து கிருமாம்பாக்கம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை செய்து வருகின்றனர். ஆனால் அவர் வழக்கு கொடுக்க செல்லும் பொழுது செயின் என்ன திருடா போய்விட்டது அதான் இருக்கிறது இல்லையா என காவல்துறையினர் பதிலளித்துள்ளனர்.   இது கண்டிக்கத்தக்கது. மாலை 5 மணி அளவில் பொதுமக்கள் அதிகம் செல்லக்கூடிய சாலையில் துணிச்சலாக இரண்டு வாகனத்தில் வந்து நான்கு பேர்  சங்கிலி பறிக்க முயன்ற சம்பவம் அப்பகுதியில் மட்டுமல்ல நமது புதுச்சேரி மாநில மக்களிடையே மிகுந்த அச்சத்தை ஏற்படுத்தி உள்ளது. அவர்கள் மீது காவல்துறை எடுத்த நடவடிக்கை என்ன என்பதை தெளிவுபடுத்த வேண்டுமென கேட்டுக் கொள்கிறேன்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

Govt school teacher snatched gold chain Heated debate in the Assembly!


கருத்துக் கணிப்பு

மத்திய அரசின் பட்ஜெட் அறிவிப்புகள்!



Advertisement

கருத்துக் கணிப்பு

மத்திய அரசின் பட்ஜெட் அறிவிப்புகள்!




Seithipunal
--> -->