காங்கிரஸ் கட்சி தொடங்கியது குஜராத்தில், அங்கு பாஜகவை தோற்கடிக்க வேண்டும்; ராகுல் காந்தி அழைப்பு..!
The Congress party started in Gujarat and Rahul Gandhi says that the BJP should be defeated there
காங்கிரஸ் தலைவர்களுடனான கூட்டம் குஜராத் மாநிலத்தில் நடந்து வருகிறது. இதில், லோக்சபா எதிர்க்கட்சித் தலைவரும், லோக்சபா எதிர்க்கட்சித் தலைவருமான காங்கிரஸ் எம்.பி. ராகுல் காந்தி கலந்து கொண்டு உரையாற்றினார்.
இதன் போது அவர் குறிப்பிட்டுள்ளதாவது; ‘நம்முடைய போராட்டம் வெறும் அரசியல் போராட்டம் மட்டுமல்ல; பாஜக – ஆர்எஸ்எஸ் மற்றும் காங்கிரஸ் இடையேயான கருத்தியல் போராட்டமாகும் என்றும் தெரிவித்துள்ளார்.

அத்துடன், பாஜகவை தோற்கடிக்க , காங்கிரஸ் கட்சி ஒன்று மட்டுமே உள்ளது, என்று நாட்டு மக்களுக்கு தெரியும் என்றும், ஆர்எஸ்எஸ் மற்றும் பாஜகவை தோற்கடிக்க வேண்டுமானால், குஜராத் வழியாகவே செல்ல வேண்டும் எனவும், காங்கிரஸ் கட்சி குஜராத்திலிருந்து தான் தொடங்கியது என்று பேசியுள்ளார்.
மேலும், குஜராத் மக்கள் மிகச் சிறந்த தலைவர்களான மகாத்மா காந்தி மற்றும் சர்தார் படேலை ஆகியோரை அளித்துள்ளார். ஆனால், இன்று குஜராத்தில் நம்முடைய செல்வாக்கு குறைந்துள்ளது என்று சுட்டிக்காட்டியுள்ளார்.

அதனை தொடர்ந்து அவர் பேசிகையில்; மாவட்ட மூத்த தலைவர்களைச் சந்தித்தபோது, நம்மிடையே உள்ள போட்டியானது ஆக்கப்பூர்வமாக இல்லாமல், அழிவை ஏற்படுத்துவதாக உள்ளது என்று அவர்கள் கூறினர். இரண்டாவதாக, உள்ளூர் மக்களுக்கு தேர்தலில் வாய்ப்புகள் வழங்கப்படவில்லை என்று கூறுகின்றனர் என்று தெரிவித்துள்ளார்.
அத்துடன், மாவட்டத்தை அகமதாபாத்திலிருந்து இயக்கக் கூடாது என்றும், மாவட்டம் மாவட்டத்திலிருந்தே இயங்க வேண்டும் எனவும், குறித்த மாவட்டத் தலைவர்கள் பலப்படுத்தப்பட வேண்டும் என்றும், அதேப்போல, மாவட்டத் தலைவருக்கு பொறுப்பும் அதிகாரமும் வழங்கப்பட வேண்டும் என்றும், இந்தப் பணியை இப்போது இருந்தே தொடங்க வேண்டும் என்று மாவட்ட மூத்த தலைவர்கள் கூறியதாகவும் ராகுல் காந்தி அங்கு குறிப்பிட்டுள்ளார்.
English Summary
The Congress party started in Gujarat and Rahul Gandhi says that the BJP should be defeated there