இன்று மாலையுடன் ஓய்வடைகிறது தேர்தல் பிரச்சாரம்!...இறுதிக்கட்ட வாக்கு சேகரிப்பில் பிரியங்கா காந்தி தீவிரம்! - Seithipunal
Seithipunal


நாடாளுமன்ற எதிர்க்கட்சி தலைவரும், காங்கிரஸ் தலைவருமான ராகுல் காந்தி ராஜினாமா செய்த வயநாடு நாடாளுமன்ற தொகுதிக்கான இடைத்தேர்தல் தேதியை  இந்திய தேர்தல் ஆணையம் அறிவித்தது.

அதன்படி அங்கு நாளை மறுநாள் 13-ம் தேதி வாக்குப்பதிவு நடைபெறும் நிலையில், தேர்தலில் பதிவான வாக்குகள் நவம்பர் 23-ம் தேதி எண்ணப்பட உள்ளது. இதன் காரணமாக அரசியல் கட்சியினர் இடையே தற்போது அங்கு அனல் பறக்கும் பிரச்சாரம் தீவிரமடைந்து இறுதிக்கட்டத்தை எட்டி உள்ளது.

இதற்கிடையே கடந்த மாதம் 23-ம் தேதி, வயநாடு மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் காங்கிரஸ் வேட்பாளர் பிரியங்கா காந்தி வேட்புமனுவை தாக்கல் செய்தார். பின்னர் 28-ம் தேதி பிரச்சாரம் மேற்கொண்டார்.

தொடர்ந்து 5 நாள் பயணமாக அங்கு அவர் தீவிர பிரச்சரம் மேற்கொண்டு வருகிறார்.  பிரியங்கா  காந்தியை எதிர்த்து  இந்திய கம்யூனிஸ்டு கட்சி சார்பில் சத்யன் மொகெரி, பா.ஜ.க சார்பில் நவ்யா ஹரிதாஸ் போட்டியிடுகின்றனர். மேலும், இன்று மாலையுடன் பிரச்சாரம் நிறைவடைய உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

The election campaign is resting with this evening priyanka gandhi is serious about the final vote collection


கருத்துக் கணிப்பு

மத்திய அரசின் பட்ஜெட் அறிவிப்புகள்!



Advertisement

கருத்துக் கணிப்பு

மத்திய அரசின் பட்ஜெட் அறிவிப்புகள்!




Seithipunal
--> -->