'அம்பேத்கர் சிலைக்கு காவி, விபூதி அணிவிக்க மாட்டோம்' அர்ஜூன் சம்பத் உத்தரவாதம்; மணிமண்டபம் செல்ல அனுமதி வழங்கிய உயர் நீதிமன்றம்; மீறினால் நடவடிக்கை..! - Seithipunal
Seithipunal


அண்ணல் அம்பேத்கரின் 135-வது பிறந்தநாள் ஏப்ரல் 14-ஆம் தேதி கொண்டாடப்படுகிறது. இந்நிலையில், அம்பேத்கர் சிலைக்கு காவி வேட்டி, விபூதி மற்றும் குங்குமம் அணிவிக்க மாட்டோம் என்ற உத்தரவாதத்தை ஏற்று பிறந்தநாள் நிகழ்ச்சியில் பங்கேற்க இந்து மக்கள் கட்சியின் தலைவர் அர்ஜூன் சம்பத்துக்கு சென்னை உயர் நீதிமன்றம் அனுமதி வழங்கியுள்ளது. 

அம்பேத்கர் பிறந்தநாள் விழாவில் கலந்துகொள்ள அனுமதி வழங்கக்கோரி மார்ச் 20-ஆம் தேதி  இந்து மக்கள் கட்சியின் சார்பில் காவல்துறைக்கு மனு அளிக்கப்பட்டது.

குறித்த மனுவில், ராஜா அண்ணாமலைபுரத்தில் உள்ள அம்பேத்கரின் உருவ சிலைக்கு மாலை அணிவிக்க அர்ஜூன் சம்பத் உள்பட 25 பேருக்கு அனுமதி வழங்கக் கோரியும், போதுமான பாதுகாப்பை கோரியும் அருண்குமார் என்பவர் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தார். 

அம்பேத்கரின் பிறந்தநாள் நிகழ்ச்சியில் கலந்து கொள்ளும் போது, யாருக்கு எதிராகவும் கோஷங்களை எழுப்ப மாட்டோம் என்றும், அம்பேத்கரின் சிலைக்கு காவி வேட்டி, சந்தன திலகம், விபூதி மற்றும் குங்குமம் அணிவிக்க மாட்டோம் என்றும், வாத்தியங்கள் இசைக்க மாட்டோம், போக்குவரத்துக்கு இடையூறு செய்ய மாட்டோம் என்று உத்தரவாதம் அளித்தும் காவல்துறை அனுமதி மறுத்துள்ளது. இதன் காரணமாக அருண்குமார் என்பவர் காவல்துறை அனுமதி வழங்குமாறு உத்தரவிட வேண்டும் என்று கோரிக்கை வைத்துள்ளார்.

இந்த நிலையில், குறித்த வழக்கு நீதிபதி ஜி.கே.இளந்திரையன் முன்பு விசாரணைக்கு வந்தது. காவல்துறை தரப்பில் ஆஜரான வழக்கறிஞர், அனுமதி வழங்கினால் பொது அமைதி பாதிக்கப்படும் என்று எதிர்ப்பு தெரிவித்தார்.

ஆனால், வழக்கை விசாரித்த நீதிபதி, மனுதாரர் அளித்த உத்தரவாதத்தை ஏற்று, பட்டினப்பாக்கம் காவல்துறை வாகனத்தில் சென்று பிறந்தநாள் நிகிழ்ச்சியில் கலந்துகொள்ள வேண்டும் என்று உத்தவிட்டுள்ளார்.அத்துடன்,  உத்தரவாதம் மீறப்பட்டால் அது தீவிரமாக எடுத்துக்கொள்ளப்படும் என்றும் அது தொடர்பில் காவல்துறை உரிய நடவடிக்கை எடுக்கலாம் என்று உத்தரவிட்டுள்ளார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

The High Court granted permission to visit Ambedkar Manimandapam on the basis of Arjun Sampath guarantee


கருத்துக் கணிப்பு

பாஜக, காங்கிரஸ் கட்சியின் தமிழக தலைவர்கள் மாற்றம் குறித்த செய்தி...



Advertisement

கருத்துக் கணிப்பு

பாஜக, காங்கிரஸ் கட்சியின் தமிழக தலைவர்கள் மாற்றம் குறித்த செய்தி...




Seithipunal
--> -->