நாளை மறுநாள் தவெக மாநாட்டின் அந்த முக்கிய பணி!....பொதுச்செயலாளர் அறிவித்த முக்கிய தகவல் இதோ!
The important task of the tvk conference the day after tomorrow here is the important information announced by the general secretary
தமிழக வெற்றி கழகத்தின் முதல் மாநில மாநாடு அடுத்த மாதம் 27-ம் தேதி விக்கிரவாண்டி வி.சாலையில் மாலை 4 மணிக்கு நடைபெறும் என்று நடிகர் விஜய் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளார்.
இதற்கான பணிகள் தீவிரப்படுத்தப்பட்டு வரும் நிலையில், மாநாட்டுக்கு வரும் தொண்டர்கள் மற்றவர்களுக்கு முன் மாதிரியாக நாகரீகமான முறையில் வரவேண்டும் என்றும், குறிப்பாக மாநாட்டுக்கு பெண்களை பாதுகாப்பாக அழைத்து வர வேண்டும். அவர்களது பாதுகாப்பை மாவட்ட பொறுப்பாளர்கள் உறுதி செய்ய வேண்டும் என்று தொண்டர்களுக்கு தவெக கட்சி சார்பில் உத்தரவு பிறப்பிக்கப்பட்டு உள்ளது.
மேலும் இந்த மாநாட்டில் கட்சி கொடியின் அர்த்தம் மற்றும் மற்றும் கட்சியின் கொள்கைகளை விஜய் அறிவிப்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இந்த நிலையில் நாளை மறுநாள் காலை 8 மணிக்கு தமிழக வெற்றிக் கழகத்தின் மாநாடு பூஜை நடைபெறும் என கட்சியின் பொதுச்செயலாளர் புஸ்ஸி ஆனந்த் தெரிவித்துள்ளார். தொடர்ந்து பூமி பூஜைக்கு பிறகு மாநாட்டு திடலில் பந்தல் அமைப்பது உள்ளிட்ட பணிகள் தொடங்கும் என்று அவர் தகவல் தெரிவித்துள்ளார்.
English Summary
The important task of the tvk conference the day after tomorrow here is the important information announced by the general secretary