தமிழக பா.ஜ.க. வின் அடுத்த தலைவர் அண்ணாமலை..? DR தமிழிசை சவுந்தரராஜன்..?
The next president of the Tamil Nadu BJP
அடுத்த ஆண்டு சட்டமன்றத் தேர்தல் நடைபெறவுள்ளதை தொடர்ந்து, நாடு முழுவதும் பா.ஜ.க உட்கட்சித் தேர்தல் நடந்து வருகிறது. அதன்படி தமிழகத்திலும் கிளைகள் முதல் மாவட்டம் வரை நிர்வாகிகள் தேர்தல் நடத்தி முடிக்கப்பட்டுள்ளன.
வருகின்ற 15-ந் தேதிக்குள் புதிய மாநில தலைவரை தேர்வு செய்ய வேண்டும் என்பதற்காக பா.ஜ.க பணிகளை தொடங்கி உள்ளது.
தமிழகத்தின் பா,ஜ .க வின் தற்போதைய தலைவர் அண்ணாமலை பதவிக்கு வந்து இரண்டரை ஆண்டுகள் ஆகிறது. ஒருவர் தலைவர் பதவியில் இருமுறை இருக்கலாம். அந்த வகையில் மீண்டும் அண்ணாமலைக்கே வாய்ப்பு வழங்கலாம் என்று கூறப்படுகிறது.
அடுத்த ஆண்டு சட்டமன்றத் தேர்தலை சந்திக்க உள்ளநிலையில்,கடந்த தேர்தலில் அ.தி.மு.க.வுடன் கூட்டணி அமையாமல் போனதற்கு அண்ணாமலை தான் காரணம் என்று குற்றம் அவர் மீது சாட்டப்பட்டது.
எனவே, அ.தி.மு.க.வுடன் இணக்கமாக செல்பவர்களை நியமிக்கலாமா? என்ற கோணத்திலும் ஆலோசிக்கப்படுகிறது. அதன்படி டாக்டர் தமிழிசை சவுந்தரராஜன் பெயரும் பரிசீலிக்கப்படுவதாக கட்சி வட்டாரத்தில் பேசப்படுகிறது.
English Summary
The next president of the Tamil Nadu BJP