ஆளுங்கட்சி அட்டூழியம்!...மகளிரணி தலைவி ஒரு திருடி!....கடுமையாக தாக்கி, செருப்பு அணிவித்து ஊர்வலம்! - Seithipunal
Seithipunal


பீகார் மாநிலம், சீதாமார்ஹி மாவட்டத்தில் உள்ள பைர்கனியாவில் அம்மாநிலத்தில் ஆட்சி செய்து வரும் ஐக்கிய ஜனதா தள கட்சி  சார்பில் நிகழ்ச்சி ஒன்றிற்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.

இதற்கிடையே இந்த கட்சியில் சீதாமார்ஹி மாவட்ட மகளிரணி தலைவராக காமினி பட்டேல் இருந்து வரும் நிலையில், இவரை நிகழ்ச்சிக்கு  அழைக்கவில்லை என்று சொல்லப்படுகிறது.

இதனால், ஆத்திரமடைந்த காமினி இது தொடர்பாக சமூக வலைதளத்தில் பதிவிட்டுள்ளார்.
இந்த சூழலில், அக்கட்சியின் வார்டு கவுன்சிலர் சஞ்சயை நேரில் சந்தித்து நிகழ்ச்சிக்கு தன்னை அழைக்காதது குறித்து தகராறில் ஈடுபட்டு உள்ளார். இதில் இருவருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்ட போது, கவுன்சிலர் மற்றும் அவருடைய ஆதரவாளர்கள் காமினியை அடித்து, உதைத்துள்ளனர்.

அதுமட்டுமல்லாமல் அவரை திருடி என கூறி, அவருக்கு செருப்பு அணிவித்து கவுன்சிலரின் வீட்டுக்கு அருகே இருந்த தெருவில் காமினியை தரதரவென இழுத்து சென்றுள்ளனர். இது தொடர்பான வீடியோ ஒன்று வைரலாகி வரும் நிலையில்,  அந்த பதிவில் காமினியின் முகம் வீங்கிய நிலையிலும், உடலில் காயங்களுடனும், கழுத்தில் செருப்புகளை அணிந்து காணப்படுகிறார்.


தொடர்ந்து, சஞ்சய் சிங்கிடம் போலீசார் விசாரணை நடத்தி வரும் நிலையில், சமூக வலைத்தளமான பேஸ்புக்கில் விமர்சனங்கள் வெளியான விவகாரத்தில் இந்த தாக்குதல் நடந்துள்ளதாக போலீசார் தெரிவித்துள்ளனர்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

The ruling party is atrocious women team leader is a thief Severely beaten paraded in sandals


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->