மோடியின் பி.பி.சி ஆவண படத்தை தமிழில் வெளியிடுவேன்... திருமாவளவன் அறிவிப்பு..!! - Seithipunal
Seithipunal


சென்னையில் அமைந்துள்ள மொழிப்போர் தியாகிகள் நிறைவு நினைவிடத்தில் விசிக தலைவர் திருமாவளவன் மலர் வளையம் வைத்து மரியாதை செலுத்தினார். பிறகு செய்தியாளர்களை சந்தித்த அவர் பேசியதாவது "பிரதமர் மோடிக்கு எதிராக வன்முறை வெறியாட்டம் குறித்து ஆவணப்படம் ஒன்றை பிபிசி வெளியிட்டு உலகம் தழுவிய அளவில் ஒரு கொந்தளிப்பை ஏற்படுத்தியிருக்கிறது. குஜராத்தில் அரங்கேறிய உண்மை வெளிச்சத்திற்கு கொண்டுவரப்பட்டுள்ளது.

தன்னுடைய குற்றத்தை உணர்ந்து பிரதமர் பதவியில் இருந்து மோடி விலக வேண்டும். எந்த அளவுக்கு சிறுபான்மை சமூகத்திற்கு எதிராக வெறுப்பை அவர் விதைத்திருக்கிறார், வன்முறை தூண்டி இருக்கிறார், ஒரு மிகப்பெரிய இனப்படுகொலை செய்ததற்கு காரணமாக இருக்கிறார் என்பதை பிபிசி ஆதாரங்களோடு வெளியிட்டுள்ளது. உண்மையை வெளிக்கொண்டு வந்த பிசிசிஐயும் இவர்கள் அச்சுறுத்தி வருகிறார்கள்.

ஒரே நாடு ஒரே தேர்தல் என்ற முழுக்கத்தை முன் வைக்கிறார்கள். இவையெல்லாம் மிகவும் ஆபத்தான பாசிச அரசியல் என்பதால் தான் பாஜகவை தனிமைப்படுத்த வேண்டும் என விடுதலை சிறுத்தைகள் கட்சி வலியுறுத்தி வருகிறது. அதன் அடிப்படையில் தான் அவர்களின் கருத்தின் பிரதிநிதியாக இருக்கும் தமிழக ஆளுநர் ஆர்.என் ரவியை உடனடியாக திரும்ப பெற வேண்டும். 

தமிழ்நாட்டின் ஆளுநராக நீடிப்பது நல்லது அல்ல. தமிழ் நாட்டு அரசியலுக்கும் தமிழ்நாட்டுக்கும் முரணாக இருக்கும் என்பதை மீண்டும் வலியுறுத்துகிறோம். ஈரோடு கிழக்குத் தொகுதி இடைத்தேர்தலில் காங்கிரஸ் வேட்பாளருக்கு மக்கள் நீதி மய்யம் ஆதரவு அளித்து இருப்பதை வரவேற்கிறோம். பிபிசி வெளியிட்டுள்ள வீடியோவை இணையத்தில் பார்க்க முடியாத சூழலை பாஜக அரசு ஏற்படுத்தியுள்ளது. எனவே பிபிசியின் ஆவணப் படத்தை தமிழில் மொழிபெயர்ப்பு செய்து வெளியிட முயற்சிகளை மேற்கொள்வேன்" என திருமாவளவன் தெரிவித்துள்ளார். அவ்வாறு வெளியிடப்பட்டால் தமிழக அரசியலில் பெரும் புயலை கிளப்பும் என அரசியல் விமர்சகர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Thirumavalavan announced Modis BBC documentary will be released in Tamil


கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?



Advertisement

கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?




Seithipunal
--> -->