ஆளுநர் ரவிக்கு தகுதியில்லை.. ஜன.13ல் ஆளுநர் மாளிகை முற்றுகை.. திருமாவளவன் அறிவிப்பு..!! - Seithipunal
Seithipunal


தமிழக சட்டப்பேரவையில் 2023 ஆம் ஆண்டிற்கான முதல் கூட்டத்தொடர் இன்று ஆளுநர் ஆர்.என் ரவி உரையுடன் தொடங்கியது. தமிழக அரசால் வழங்கப்பட்ட உரையில் சில பகுதிகளை ஆளுநர் ரவி வாசிக்காமல் தவிர்த்து உள்ளார். இதனை எதிர்த்து தமிழக முதல்வர் மு.க ஸ்டாலின் தீர்மானம் வாசித்துக் கொண்டிருக்கும் பொழுதே ஆளுநர் ரவி சட்டப்பேரவையில் இருந்து வெளியேறினார். இந்த விவகாரம் அரசியல் வட்டாரத்தில் புயலை கிளப்பியுள்ளது.

இந்த நிலையில் ஆளுநர் ஆர்.என் ரவியின் செயலுக்கு விசிக தலைவர் திருமாவளவன் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் தனது ட்விட்டர் பக்கத்தில் "ஆளுநரின் நடவடிக்கைகள் அவரின் ஆர்.எஸ்.எஸ் முகத்தை மீண்டும் அம்பலப்படுத்தியுள்ளது. தேசிய கீதத்தை இசைப்பதற்க்குள் ஆளுநர் பேரவையிலிருந்து வெளியேறியது அவை மீறல் மட்டுமின்றி தேசிய கீத அவமதிப்பாகும். அவர் இனியும் அப்பதவியில் நீடிக்க தகுதி இல்லை.

எனவே அவர் பதவி விலக வலியுறுத்தி ஜனவரி 13 அன்று விசிக சார்பில் ஆளுநர் மாளிகை முற்றுகை போராட்டம் நடத்தப்படும். ஆளுநரின் போக்குகள் ஏற்கனவே திட்டமிட்ட ஒன்றுதான். இந்திய அரசுக்கும் மாநில அரசுக்கும் இடையில் முரண்பாடுகளை உருவாக்கி அரசியல் குழப்பத்தை ஏற்படுத்துவதே அவர்களின் நோக்கம். இதனை வன்மையாக கண்டிக்கிறோம்" என பதிவிட்டுள்ளார். 



இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Thirumavalavan announced that Governor House siege protest on Jan13


கருத்துக் கணிப்பு

இந்த கனமழையை தமிழக அரசு எதிர்கொண்ட விதம்...!



Advertisement

கருத்துக் கணிப்பு

இந்த கனமழையை தமிழக அரசு எதிர்கொண்ட விதம்...!




Seithipunal
--> -->