திருமாவளவன் மக்களை ஏமாற்றுகிறார் - எச்.ராஜா காட்டம்! - Seithipunal
Seithipunal


தமிழக பாரதிய ஜனதா ஒருங்கிணைப்பு குழு தலைவர் எச்.ராஜா, கோவையில் இன்று செய்தியாளர்களிடம் பேசினார்.

அப்போது பேசிய அவர், தமிழக பா.ஜ.க.வில் தற்போது உறுப்பினர் சேர்க்கை நடந்து வருவதாகவும், எங்களுக்கு 31 லட்சம் பேர் உறுப்பினர்களாக உள்ளதாக தெரிவித்த அவர், இதனை 1 கோடியாக உயர்த்த உள்ளோம் என்றும், கிராமப்புறங்களில் விவசாயிகள், விவசாய தொழிலாளர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு உள்ளதாக தெரிவித்தார்.

மேலும், மத்திய அமைச்சர் நிதின்கட்கரி, சென்னை-தஞ்சை தேசிய நெடுஞ்சாலை பணியை நேரடியாக பார்வையிட வந்திருந்தார் என்றும், மத்திய  அரசு தேசிய நெடுஞ்சாலைக்காக எவ்வளவு கோடி ஆனாலும் செலவு செய்ய தயாராக இருக்கிறது. ஆனால் நிலம் கையகப்படுத்தி கொடுப்பதில் தமிழக அரசு ஒத்துழைப்பு அளிக்கவில்லை என்று குற்றம் சாட்டினார். 

தொடர்ந்து பேசிய அவர், நேற்று திருமாவளவன், முதலமைச்சரை நேரில் சந்தித்துள்ளார்.திருமாவளவன், அக்டோபர் 2ம் தேதி  மாநாடு நடைபெறுவதற்குள் தமிழகத்தில் உள்ள டாஸ்மாக் கடைகள் மூடப்பட்டு இருக்க வேண்டும் என கேட்டு இருக்க வேண்டும். அதனை எதிர்பார்க்கிறோம் என சொல்லி இருக்க வேண்டும். ஆனால் அப்படி அவர் சொல்லவில்லை.

இதன் மூலம்  அக்டோபர் 2 மாநாடு மக்களை ஏமாற்றுகிற செயல் என்றும், இன்று மாநில அரசு 500 கடைகளை மூடி உள்ளது என கூறி உள்ளது. ஆனால் 1000 கிளப்களை திறந்துள்ளதாக லுரிய அவர், இது எல்லாவிதத்திலும் மக்களை முழுமையாக ஏமாற்றும் மோசடி அணுகுமுறை ஆகும் என்று கூறினார். 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Thirumavalavan deceives people H Raja kattam


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->