மதுவிலக்கிற்காக இபிஎஸ் என்ன போராட்டம் நடத்தியுள்ளார்..? விசிக தலைவர் திருமாவளவன் கேள்வி..!! - Seithipunal
Seithipunal


விழுப்புரம் மாவட்டம் மரக்காணத்தில் கள்ளச்சாராயம் குடித்து பாதிக்கப்பட்டு முண்டியம்பாக்கம் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் நபர்களை விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன் நேரில் சந்தித்து ஆறுதல் கூறினார். பிறகு செய்தியாளர்களை சந்தித்த அவர் பேசியதாவது "டாஸ்மாக் என்கிற அரசு அனுமதி பெற்ற மது வணிகம் நடைபெற்றுக் கொண்டிருக்கும் பொழுது கள்ளச்சாராய பழக்கம் இந்த அளவுக்கு அதிகரித்துள்ளது என்பது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அவரவர் குடியிருப்புகளுக்கு சென்று விநியோகம் செய்யக்கூடிய அளவுக்கு இருக்கிறது என்றால் வெளிப்படையாகவே அனைவருக்கும் தெரிந்தே நடைபெறுகிறது என்பது தெரிய வருகிறது. 

தமிழக முதல்வர் உடனடியாக பாதிக்கப்பட்டவர்களை சந்தித்திருக்கிறார், ஆறுதல் சொல்லியிருக்கிறார். உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு தலா பத்து லட்சம் ரூபாய் இழப்பீடு வழங்கியுள்ளார் என்பது ஆறுதல் அளிக்கக்கூடியது என்றாலும் கூட இந்த பிரச்சனைக்கு ஒரு நிரந்தரமான தீர்வை காண வேண்டும். விசிகவை பொறுத்தவரை மதுவிலக்கை முழுமையாக நடைமுறைப்படுத்த வேண்டும் என்று தொடர்ந்து வலியுறுத்தி வருகிறோம்.

ஒன்றிய அரசும், மாநில அரசும் ஒருங்கிணைந்து மதுவிலக்கை அமல்படுத்தாமல் இதை கட்டுப்படுத்த முடியாது. கள்ளச்சாராயம் பெருகும் என காரணம் காட்டி அரசு மது வணிகத்தை அனுமதிப்பது அல்லது அரசே நடத்துவது என்பதை எந்த வகையிலும் ஏற்புடையது அல்ல. சம காலத்தில் மதுவிலக்கை நடைமுறைப்படுத்த வேண்டும். கள்ளச்சாராய ஒழிப்பு நடவடிக்கைகளையும் தீவிரப்படுத்த வேண்டும். இதுதான் அரசு செய்ய வேண்டியதாக இருக்குமே தவிர மது கடைகளை திறக்கவில்லை என்றால், மதுவிலக்கை நடைமுறைப்படுத்தினால் கள்ளச்சாராயம் பெருகும் என்ற காரணத்தை சொல்லி அரசு மது வணிகம் செய்வதும், அதேபோன்று கள்ளச்சாராய வணிகத்தை கண்டும் காணாமல் இருப்பதும் மிகப்பெரிய பாதிப்பை ஏற்படுத்துகிறது. 

பொதுவாக இந்தியா முழுவதும் இந்த நிலை இருக்கிறது. ஒரு குறிப்பிட்ட மாநிலம் ஒரு குறிப்பிட்ட கட்சியின் ஆட்சி என்று இல்லை. எனவே மாண்புமிகு முதல்வர் அவர்கள் தீவிரமாக மதுவிலக்கை நடைமுறைப்படுத்த முதற்கட்ட நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும். கள்ளச்சாராயம் தடுப்பு நடவடிக்கைகளை மேற்கொள்வதற்கு சிறப்பு படையை அமைக்க வேண்டும், சிறப்பு உணவு பிரிவை அமைக்க வேண்டும்.

இது போன்ற தொழில்களில் ஈடுபடுபவர்களின் சொத்துக்களை அரசு பறிமுதல் செய்ய வேண்டும. மதுவால் உயிரிழந்தவர்களின் மனைவிகள் விதவைகளாகவும், அனாதைகளாகவும் இன்று இருக்கிறார்கள். எனவே அவர்களை அரசே தத்தெடுத்துக் கொள்ள வேண்டும். எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிச்சாமி மதுவிலக்குக்காக இதுவரை என்ன போராட்டம் நடத்தியுள்ளார்..? எடப்பாடி பழனிச்சாமி மதுவிலக்கை அமல்படுத்த கோரி போராட்டம் நடத்தினால் அவருடன் சேர்ந்து நானும் போராட தயாராக உள்ளேன்" என செய்தியாளர்கள் சந்திப்பில் திருமாவளவன் தெரிவித்துள்ளார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Thirumavalavan said EPS had not conduct protest against alcohol prohibition


கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?



Advertisement

கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?




Seithipunal
--> -->