தமிழ்நாட்டில் தாமரை மலருவதற்கு இடமே இல்லை - தொல். திருமாவளவன் பேட்டி! - Seithipunal
Seithipunal


சென்னை பாரிமுனையில் உள்ள ராஜா அண்ணாமலை மன்றத்தில் கலைஞர் நூற்றாண்டு நிறைவு விழாவை முன்னிட்டு கலைஞரின் வரலாற்றுப் புகைப்பட கண்காட்சி அமைக்கப்பட்டுள்ளது. இதை பார்வையிட்ட விசிக தலைவர் தொல். திருமாவளவன் செய்தியாளர்களிடம் பேசினார். 

அப்போது அவர் கூறியதாவது, "இந்த புகைப்பட கண்காட்சியை கலைஞரின் வரலாறு என்று சொல்வதை விட, தமிழரின் வரலாறு என்று சொல்வது தான் பொருத்தமாக இருக்கும். கலைஞர்  ஒரு போராளியாக பல கடுமையான விமர்சனங்களைத் தாண்டி தமிழுக்கும், தமிழ் மக்களுக்கும் நிறைய பங்காற்றியுள்ளார்.

இன்றைய தமிழ்நாட்டை மற்ற மாநிலங்கள் வியந்து பார்க்கும் அளவிற்கு மாற்றியமைத்த சிற்பி கலைஞர் தான்" என்று கூறிய திருமாவளவன், தேர்தலுக்குப் பிந்தைய கருத்துக்கணிப்பு குறித்த கேள்விக்கு, " நாம் கருத்துக்கணிப்புகளை பொருட்படுத்த தேவையில்லை. 

இந்த கடந்த 10 ஆண்டு கால ஆட்சி நாட்டை எப்படி அதல பாதாளத்தில் சரித்துள்ளது என்று அனைவரும் அறிவர். நாளை மறுநாள் இதற்கு ஒரு முடிவு பிறக்கும். இந்தியாவை சூழ்ந்துள்ள இருள் மறைந்து புதிய வெளிச்சம் பிறக்கவுள்ளது. 

இந்தியா கூட்டணியின் ஆட்சி மலரும்போது அது ஜனநாயகத்தைப் பாதுகாக்கும் புதிய விடியலாக இருக்கும். தாமரை தமிழ்நாட்டில் மலருவதற்கு இடமே இல்லை. மேலும் இந்தியா கூட்டணி கட்சியினரிடையே ஒரு ஜனநாயகப் புரிதல் உள்ளது. ஆட்சியில் அமர்ந்தவுடன் ஜனநாயக ரீதியாகவே இந்தியா கூட்டணி எதையும் தீர்மானிக்கும்" என்று திருமாவளவன் கூறினார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Thirumavalavan says No Space in TamilNadu For Lotus Blooming


கருத்துக் கணிப்பு

விக்கிரவாண்டி இடைத்தேர்தலில் அதிமுகவின் வாக்குகள் யாருக்கு செல்லும்?



Advertisement

கருத்துக் கணிப்பு

விக்கிரவாண்டி இடைத்தேர்தலில் அதிமுகவின் வாக்குகள் யாருக்கு செல்லும்?




Seithipunal
--> -->