மாட்டுபொங்கல் அன்று சென்னை மாநகராட்சியில் இறைச்சிக் கூடங்களை மூட உத்தரவு!
Thiruvalluvar Day Chennai Corporation meet shop closed
திருவள்ளுவர் தினம் (15.01.2025) அன்று, சென்னை மாநகராட்சி நிர்வாகத்திற்கு உட்பட்ட இறைச்சிக் கூடங்கள் அரசு உத்தரவின்படி மூடப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து சென்னை மாநகராட்சி விடுத்துள்ள அறிவிப்பில் , "திருவள்ளுவர் தினத்தை முன்னிட்டு, வருகின்ற 15.01.2025 புதன்கிழமை அன்று பெருநகர சென்னை மாநகராட்சியின் கட்டுப்பாட்டில் இயங்கும் புளியந்தோப்பு, வில்லிவாக்கம், சைதாப்பேட்டை மற்றும் கள்ளிக்குப்பம் ஆகிய இறைச்சிக் கூடங்கள் அரசு உத்தரவின்படி மூடப்படவுள்ளன.
எனவே, இறைச்சிக் கடை வியாபாரிகள், பொதுமக்கள் அனைவரும் இந்த உத்தரவினை செயல்படுத்த முழு ஒத்துழைப்பு வழங்குமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறது" என்று அந்த அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
English Summary
Thiruvalluvar Day Chennai Corporation meet shop closed