வயநாட்டிற்கு இப்படி தான் வருவேன்!...ரோட் ஷோ நடத்தி நாளை பிரியங்கா காந்தி வேட்புமனு தாக்கல்! - Seithipunal
Seithipunal


இந்திய தேர்தல் ஆணையம் கடந்த 15-ம் தேதி மகாராஷ்டிரா, ஜார்கண்ட் ஆகிய மாநிலங்களில் உள்ள சட்டசபைகளுக்கான தேர்தல் தேதியை அறிவித்தது. மேலும் அதே நாளில் நாடாளுமன்ற எதிர்க்கட்சி தலைவரும், காங்கிரஸ் தலைவருமான ராகுல் காந்தி ராஜினாமா செய்த வயநாடு நாடாளுமன்ற தொகுதிக்கான இடைத்தேர்தல் தேதியையும்  இந்திய தேர்தல் ஆணையம் அறிவித்தது.

அதன்படி அங்கு நவம்பர் 13-ம் தேதி வாக்குப்பதிவு நடைபெறும் நிலையில், தேர்தலில் பதிவான வாக்குகள் நவம்பர் 23-ம் தேதி எண்ணப்பட உள்ளது. இதன் காரணமாக அரசியல் கட்சியினர் வேட்பாளர்களை முன்னிறுத்துவதில் தீவிரம் கட்டி வருகின்றனர்.

முன்னதாக வயநாடு நாடாளுமன்ற தொகுதி இடைத்தேர்தலில் காங்கிரஸ் வேட்பாளராக பிரியங்கா காந்தி போட்டியிடுவார் என்று அந்த கட்சியின் அகில இந்திய காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே அறிவித்துள்ளார்.

இந்த நிலையில், வயநாடு மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நாளை பிரியங்கா காந்தி வேட்புமனு தாக்கல் செய்ய உள்ளார். இதற்காக, கல்பெட்டாவில் இருந்து மாவட்ட ஆட்சியர் அலுவலகம்  வரை ரோடு ஷோ நடைபெற திட்டமிடப்பட்டுள்ளது. இதில் பிரியங்கா காந்தி, காங்கிரஸ் முன்னாள் தலைவர் சோனியா காந்தி, நாடாளுமன்ற எதிர்க்கட்சி தலைவர் ராகுல் காந்தி ஆகியோர் பங்கேற்க உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

This is how I will come to wayanad priyanka gandhi will file her nomination tomorrow by holding a road show


கருத்துக் கணிப்பு

மத்திய அரசின் பட்ஜெட் அறிவிப்புகள்!



Advertisement

கருத்துக் கணிப்பு

மத்திய அரசின் பட்ஜெட் அறிவிப்புகள்!




Seithipunal
--> -->