சர்ச்சை பேச்சு!!!எங்களை உடைக்க முயற்சி செய்பவர்களுக்கு மூக்கு உடையும்...! - எடப்பாடி பழனிசாமி
Those who try to break us will have their noses broken Edappadi Palaniswami
சட்டசபையில் அ.தி.மு.க. கொண்டுவந்த நம்பிக்கையில்லா தீர்மானம் தோல்வி அடைந்தது.இந்நிலையில் எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி செய்தியாளர்களை சந்தித்தார்.
அப்போது அவரிடம் செய்தியாளர்கள் செங்கோட்டையன் குறித்து கேள்வி எழுப்பினர்.

அதற்கு எடப்பாடிபழனிசாமி கூறியதாவது,"அ.தி.மு.க.வில் அனைவரும் ஒற்றுமையாக தான் உள்ளோம். இதில் 8 வருடமாக கட்சியை உடைக்க திட்டமிடுகின்றனர்.அ.தி.மு.க.வை யாராலும் உடைக்க முடியாது
.அனைத்து திட்டங்களையும் தவிடு பொடியாக்கி கொண்டு தான் இருக்கிறோம். எங்களை உடைக்க முயற்சி செய்பவர்களுக்கு மூக்கு உடைந்து போகும். மு.க.ஸ்டாலின் முதல்வர் ஆனதில் இருந்து திட்டத்தை போட்டுக்கொண்டு இருக்கிறார்.
அதனை முறியடித்து வருகிறோம்" எனத் தெரிவித்தார்.மேலும் பலகாலமாக இயங்கி வரும் அ.தி.மு.க.வாழ் பயனடைந்தோர் பலர்.யாரையும் கீலே தள்ளி மேல வரவேண்டுமென நாங்கள் நினைப்பதில்லை எனவும் தெரிவித்தார்.
English Summary
Those who try to break us will have their noses broken Edappadi Palaniswami