யார் அந்த சார்? சட்டப்பேரவையில் முதல்வர் ஸ்டாலின் விளக்கம்! - Seithipunal
Seithipunal


தமிழக சட்டசபையில் இன்று அண்ணா பல்கலைக்கழக மாணவிக்கு நேர்ந்த பாலியல் வன்கொடுமை சம்பவம் குறித்து விவாதம் நடைபெற்றது. 

எதிர்க்கட்சிகள் மற்றும் திமுகவின் கூட்டணி காட்சிகள் கூட்டாக கொண்டுவந்த இதுகுறித்த சிறப்பு கவன ஈர்ப்பு தீர்மானத்தில் முதல்வர் மு.க. ஸ்டாலின் பதில் அளித்து பேசுகையில், "அவையில் சில உறுப்பினர்கள் உண்மையான அக்கரையோடு பேசினாலும், ஒருவரே அரசியல் ஆதாயத்திற்காக கருத்துகள் தெரிவித்தார்.  

பாதிக்கப்பட்ட பெண் பக்கம் நின்று நியாயம் பெற்றுத்தர அரசின் திட்டம் தெளிவாக உள்ளது. பொள்ளாச்சி சம்பவத்தில் 12 நாள் கழித்துதான் முதல் தகவல் அறிக்கை பதியப்பட்டது.

ஆனால், தற்போது குற்றம் நிகழ்ந்த உடனே வழக்கு பதிவு செய்யப்பட்டு, அடுத்த நாளே குற்றவாளி கைது செய்யப்பட்டார். மத்திய அரசின் தொழில்நுட்ப கோளாறே FIR கசிந்ததற்கு காரணம். அண்ணா பல்கலைக்கழகத்தில் கேமரா அல்லது பாதுகாப்பு இல்லாமை குற்றம் சாட்டுவது ஏற்றுக்கொள்ள முடியாது.  

கசிந்த முதல் தகவல் அறிக்கையை வைத்து யார் அந்த சார் என்று கேட்கின்றனர். நாங்களும் கேட்கிறோம் அந்த சார் யார் என்று உங்களுக்கு தெரிந்தால் ஆதாரம் இருந்தால் சிறப்பு புலனாய்வு குழுவில் தெரிவியுங்கள்.

குற்றவாளிகள் யார் என்றாலும், மீண்டும் சொல்கிறேன் அது யாராக இருந்தாலும் உரிய சட்ட நடவடிக்கையுடன் கடுமையான தண்டனை உறுதிசெய்வோம். பெண்களுக்கு எதிரான குற்றங்களை இரும்புக்கரம் கொண்டு அடக்குவதே அரசின் நோக்கம்.  

பெண்கள் அதிகம் வேலைக்கு செல்லும் மாநிலம் தமிழகம் தான் என்பதை நினைவில் கொள்ள வேண்டும். மாணவி விவகாரத்தில் அரசியல் செய்ய வேண்டாம்" என்று முதல்வர் ஸ்டாலின் தெரிவித்தார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

TN Assemably Yaar Antha Sir ADMK vs DMK


கருத்துக் கணிப்பு

மத்திய அரசின் பட்ஜெட் அறிவிப்புகள்!



Advertisement

கருத்துக் கணிப்பு

மத்திய அரசின் பட்ஜெட் அறிவிப்புகள்!




Seithipunal
--> -->