தமிழகத்தில் நடப்பது மனுநீதிச் சோழன் ஆட்சி! செல்வப்பெருந்தகை பேச்சால் கொந்தளித்த அதிமுக!
TN Assembly 2025 Congress ADMK
தமிழக சட்டப்பேரவையில் இன்று தமிழ்நாட்டில் மனுநீதிச் சோழன் ஆட்சி நடைபெற்று வருவதாக காங்கிரஸ் கட்சியின் பேரவைக் குழுத் தலைவர் செல்வப்பெருந்தகை தெரிவித்ததுடன், முன்னாள் முதல்வர் இபிஎஸ் குறித்தும் விமர்சித்து பேசியுள்ளார்.
அண்ணா பல்கலைக்கழக மாணவி பாலியல் வன்கொடுமை விவகாரம் சட்டப்பேரவையில் விவாதத்தின் போது பேசிய செல்வப்பெருந்தகை, "அண்ணா பல்கலைக்கழக விவகாரத்தில் தமிழக அரசின் நடவடிக்கையையும் காவல்துறையின் செயல்பாடுகளையும் மக்கள் கவனித்து வருகின்றனர்.
இதனை எதிர்க்கட்சிகள் வாக்கு வங்கி அரசியலுக்கு பயன்படுத்துவது ஏற்றுக்கொள்ள முடியாது. தமிழ்நாட்டில் மனுநீதிச் சோழன் ஆட்சி நிலவுகிறது" என்று தெரிவித்தார்.
மேலும், தொலைக்காட்சி மூலம் அறிந்து செயல்படுபவர் நம்முடைய முதல்வராக இருக்க முடியாது என்று, முன்னாள் முதல்வர் எடப்பாடியை மறைமுக விமர்சித்தும் செல்வப்பெருந்தகை பேச, அதிமுக எம்எல்ஏக்கள், கடும் கண்டனம் தெரிவித்தனர்.
முன்னதாக அண்ணா பல்கலைக்கழக மாணவி வன்கொடுமை வழக்கியில் யார் அந்த சார் என்ற கேள்வியுடன் அதிமுக கடுமையான போராட்டத்தை முன்னெடுத்து உள்ளது. மேலும் இன்று சட்டப்பேரவைக்கு கருப்பு உடை அணிந்து "யார் அந்த சார்" என்ற ஸ்டிக்கருடன் அதிமுக உறுப்பினர்கள் வருகை தந்தனர்.
English Summary
TN Assembly 2025 Congress ADMK