புறக்கணிக்கிறோம்! அதிமுக எம்எல்ஏ.,க்கள் செய்த சம்பவம்! கொறாடா எஸ்பி வேலுமணி பேட்டி! - Seithipunal
Seithipunal


தமிழக சட்டப்பேரவையில் இருந்து அதிமுக எம்எல்ஏக்கள் வெளிநடப்பு செய்துள்ளனர்.

தொடர்ந்து சட்டப்பேரவை நேரலையில், எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி பேசுவதை நேரலை செய்யாமல் புறக்கணித்து வருவதாக அதிமுக கொறடா எஸ்பி வேலுமணி குற்றம் சாட்டியுள்ளார்.

பென்னிகுவிக் சிலை குறித்த எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி கொண்டு வந்த கவன ஈர்ப்பு தீர்மானம் நேரலையில் ஒளிபரப்பு செய்யப்படவில்லை என்று, அதிமுக எம்எல்ஏக்கள் முதலில் அமளியில் ஈடுபட்டனர்.

தொடர்ந்து அவையிலிருந்து வெளிநடப்பும் செய்தனர். பின்னர் சட்டப்பிரிவு வளாகத்தில் செய்திகளை சந்தித்த அதிமுக கொறடா எஸ்பி வேலுமணி தெரிவிக்கையில், "மக்கள் பிரச்சனை தொடர்பாக எதிர்க்கட்சி தலைவர் பேசுவதை நேரலை செய்யாததால் நாங்கள் வெளிநடப்பு செய்துள்ளோம்.

மேலும் சட்டப்பேரவை நடவடிக்கைகள் அனைத்தையும் புறக்கணிக்கிறோம்" என்றும் முன்னாள் அமைச்சர் எஸ் பி வேலுமணி தெரிவித்துள்ளார்.

ஏற்கனவே தமிழக சட்டப்பேரவையின் நிகழ்ச்சி நிரலில் உள்ள அனைத்து நிகழ்வுகளும் நேரலைகள் ஒளிபரப்பப்படும் என்று, சபாநாயகர் அப்பாவு உறுதி அளித்த நிலையில், இன்று எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி கொண்டுவந்த கவனகீர்ப்பு தீர்மானம் நேரலை செய்யப்படாமல் நிறுத்தப்பட்டது.

இதன் காரணமாகவே அதிமுக உறுப்பினர்கள் வெளிநடப்பு செய்து, சட்டப்பேரவை நடவடிக்கைகளை புறக்கணிப்பதாகவும் தெரிவித்துள்ளனர்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

TN Assembly ADMK MLAs out For LIVE telecast issue


கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?



Advertisement

கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?




Seithipunal
--> -->