கொந்தளித்த எடப்பாடி பழனிசாமி! சபாநாயகர் அளித்த விளக்கம்! - Seithipunal
Seithipunal


தமிழக சட்டப்பேரவையில் இன்று எதிர்க்கட்சித்தலைவர் எடபாடி பழனிசாமி, "அமைச்சர்கள் பேசுவதை ஒளிபரப்புவதை போல எதிர்க்கட்சி உறுப்பினர்கள் பேசுவதையும் நேரலை ஒளிபரப்பு செய்ய வேண்டும்" என்று வலியுறுத்தி பேசினார்.

மேலும், ஜனநாயக முறைப்படி சட்டமன்றத்தில் தேவைப்பட்டால் இருப்போம். எங்களின் கோரிக்கையை நிறைவேற்றாவிட்டால் நாங்கள் வெளிநடப்பு செய்வோம்" என்று சபாநாயகர் அப்பாவுக்கும், அமைச்சருக்கும்  எடப்பாடி பழனிச்சாமி எடுத்துரைத்தார்.

தொடர்ந்து, அவையில் எதிர்க்கட்சியை அவதூறாக பேசுவது தவறு என்றும் எதிர்க்கட்சித்தலைவர் எடபாடி பழனிசாமி அறிவுறுத்தினார்.

இதனை தொடர்ந்து சபாநாயகர் அப்பாவு அளித்த விளக்கத்தில், "சட்டமன்ற உரையை நேரலை செய்யும் வாய்ப்பை எதிர்க்கட்சித்தலைவருக்கு மட்டும் வழங்க முடியாது. முன்வரிசையில் கட்சித்தலைவர்கள் அமர்ந்துள்ளனர், பேசி முடிவெடுக்கப்படும்.

பேரவையில் எந்த பாரபட்சமும் இல்லாமல் செயல்படுகிறோம். நேரமில்லா நேரத்தில் குறிப்பிட்டவை மட்டுமே பேசுவோம் என அனைத்து கட்சிதலைவர்களும் முடிவு செய்து உறுதியளித்தால் மட்டுமே நேரலைக்கான பணிகள் தொடங்கும்.

எதிர்க்கட்சி தலைவர் பேசுவது மட்டுமல்ல, ஆளும் கட்சியை சேர்ந்த உறுப்பினர்கள் பேசுவதையே நேரலை செய்யவில்லை. முக்கியமான விவகாரங்கள் மட்டுமே தற்போது ஒளிபரப்பு செய்யப்பட்டு வருகிறது" என்று சபாநாயகர் அப்பாவு விளக்கமளித்தார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

TN Assembly EPS Vs Assembly Speaker appavu


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->