இளையராஜாவுக்கு தமிழக அரசு சார்பில் பாராட்டு விழா – முதல்வர் அறிவிப்பு!
TN Assembly MK Stalin Announce for Ilaiyaraaja
தமிழ் இசையின் தெய்வம் என போற்றப்படும் இசைஞானி இளையராஜா, கடந்த 50 ஆண்டுகளாக திரையுலகில் ஆழ்ந்த தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளார்.
இந்நிலையில், அவரின் பிறந்த நாளான ஜூன் 2-ம் தேதி, தமிழக அரசு சார்பில் பாராட்டு விழா நடத்தப்படும் என முதல்வர் மு.க.ஸ்டாலின் சட்டசபையில் அறிவித்தார்.
அன்னமையில் சட்டசபை உறுப்பினர் சிந்தனை செல்வன், "இளையராஜா சிம்பொனியை தமிழ்நாட்டில் நடத்த தமிழக அரசு ஏற்பாடு செய்ய வேண்டும்" என கோரிக்கை வைத்தார்.
இதற்க்கு இன்று சட்டப்பேரவையில் முதல்வர் கொடுத்த விளக்கம் பின்வருமாறு:
"நானும் இளையராஜாவை சந்தித்தபோது இதையே கேட்டேன். 400-க்கும் மேற்பட்ட இசைக்கலைஞர்கள் ஒரே மேடையில் கச்சேரி நடத்துவது சாத்தியமில்லையென அவர் தெரிவித்தார்.இருப்பினும், விரைவில் இதை நிச்சயம் நடத்துவதாக அவர் உறுதியளித்துள்ளார்."
முதல்வர் அறிவிப்பு:
தமிழக அரசின் சார்பில் இளையராஜாவின் திரையுலகப் பயணத்திற்கும், லண்டன் சிம்பொனி நிகழ்ச்சிக்கும் பாராட்டாக, ஜூன் 2-ம் தேதி சிறப்பு விழா நடத்தப்படும்.
English Summary
TN Assembly MK Stalin Announce for Ilaiyaraaja