சுட்டிக்காட்டிய 24 மணிநேரத்தில் வெற்றி! சாதித்து காட்டிய அன்புமணி இராமதாஸ்!
PMK Anbumani Ramadoss DMK GOVT MK Stalin Fire workers
தமிழ்நாடு தீயவிப்பு மற்றும் மீட்புப் பணிகள் துறைக்கு தேர்ந்தெடுக்கப்பட்டு, கடந்த நவம்பர் மாதம் பணி நியமனம் செய்யப்பட்ட தீயவிப்பு வீரர்கள் 640 பேருக்கு நாளை மறுநாள் ஏப்ரல் ஒன்றாம் தேதி முதல் பயிற்சி அளிக்கப்படும் என்று தீயவிப்பு மற்றும் மீட்புப்பணித்துறை அறிவித்திருக்கிறது.
தீயவிப்புத்துறையின் இந்த நடவடிக்கை மிகவும் தாமதமானது என்றாலும் வரவேற்கத்தக்கது என்று பாமக தலைவர் அன்புமணி இராமதாஸ் தெரிவித்துள்ளார்.
இதுகருத்தா அவரின் அறிக்கையில், "தீயவிப்புத் துறைக்கு தேர்வு செய்யப்பட்ட 674 தீயவிப்பு வீரர்களுக்கு பணி நியமன ஆணைகள் வழங்கப்பட்டு 5 மாதங்களுக்கு மேலாகியும் பயிற்சி வழங்கப்படாததை சுட்டிக்காட்டி நேற்று அறிக்கை வெளியிட்டிருந்த நான், அவர்களுக்கு உடனடியாக பயிற்சி அளிக்கப்பட வேண்டும் என்றும் வலியுறுத்தியிருந்தேன்.
எனது அறிக்கை வெளியான சில மணி நேரங்களில் தகுதியுள்ள 640 வீரர்களுக்கு பயிற்சி அளிக்கப்படும் என்று தீயவிப்புத் துறை அறிவித்தது மகிழ்ச்சியளிக்கிறது. இது பாட்டாளி மக்கள் கட்சியின் முயற்சிகளுக்குக் கிடைத்த வெற்றியாகும்.
தீயவிப்புத் துறைக்கு தேர்ந்தெடுக்கப்பட்ட 640 பேருக்கும் ஒரே இடத்தில் பயிற்சி அளிக்கப்படாமல் செங்குன்றம், இராணிப்பேட்டை, கரூர், திருநெல்வேலி, மதுரை, சேலம் ஆகிய இடங்களில் பயிற்சி அளிக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
அவ்வாறு பயிற்சி அளிக்கும் போது தேர்ந்தெடுக்கப்பட்ட வீரர்களுக்கு அவர்களின் சொந்த ஊருக்கு அருகில் உள்ள மையத்தில் பயிற்சி கிடைப்பதை தீயவிப்புத் துறை உறுதி செய்ய வேண்டும்" என்று அன்புமணி இராமதாஸ் வலியுறுத்தியுள்ளார்.
English Summary
PMK Anbumani Ramadoss DMK GOVT MK Stalin Fire workers