ரூ.37,000 கோடி...! ரூ.1000 மாதம்! தமிழக மகளிருக்கு இரு முக்கிய அறிவிப்புகளை வெளியிட்ட DyCM உதயநிதி! - Seithipunal
Seithipunal


தமிழக சட்டசபையில் துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் ஆற்றியய உரையில், காலை உணவு திட்டத்தில் மகளிர் சுயஉதவி குழுக்கள் முக்கிய பங்கை வகிக்கின்றன. இந்த ஆண்டு, சுயஉதவி குழுக்களுக்கு மொத்தம் ரூ.37,000 கோடி கடன் வழங்கும் இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

சென்னையின் புறநகர பகுதிகளில் மட்டும் 1.36 லட்சம் குடும்பங்களுக்கு பட்டா வழங்கும் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. மேலும், "வாழ்ந்து காட்டுவோம் திட்டம் 3.0" விரைவில் தொடங்கப்பட்டு, இதுவரை இணைக்கப்படாத ஒன்றியங்களும் இதில் சேர்க்கப்படும்.

கலைஞர் மகளிர் உரிமைத் தொகை திட்டத்தின் கீழ், கடந்த ஒரு ஆண்டில் மட்டும் ரூ.21 கோடி மானியம் வழங்கப்பட்டுள்ளது. இந்த திட்டத்தில் புதிதாக விண்ணப்பிக்க விரைவில் மேலும் ஒரு வாய்ப்பு வழங்கப்படும்.

விளையாட்டுத் துறையில், தமிழ்நாடு பல்வேறு தேசிய, சர்வதேச அளவிலான சாதனைகளை தொடர்ந்து பதிவிட்டு வருகிறது. அரசு, விளையாட்டு வளர்ச்சிக்காக பல்வேறு முன்னேற்றங்களை மேற்கொண்டு வருவதாகவும், தமிழ்நாட்டை விளையாட்டு துறையில் முன்னணிக்கு கொண்டுவர உறுதிப்படுத்தி வருவதாகவும் தெரிவித்தார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

TN Assembly Udhayanidhi Stalin Announce


கருத்துக் கணிப்பு

மத்திய அரசின் பட்ஜெட் அறிவிப்புகள்!



Advertisement

கருத்துக் கணிப்பு

மத்திய அரசின் பட்ஜெட் அறிவிப்புகள்!




Seithipunal
--> -->