5 மாவட்டங்களுக்கு புதிய நிர்வாகிகள் - அண்ணாமலை வெளியிட்ட அறிவிப்பு! - Seithipunal
Seithipunal


அண்மையில் ராமநாதபுரம் மாவட்ட பாஜக முழுமையாக கலைக்கப்பட்ட நிலையில், அந்த மாவட்டத்திற்கு பாஜகவின் மாவட்ட பார்வையாளரை நியமித்து அண்ணாமலை அறிவிப்பு வெளியிட்டுள்ளார்.

மேலும் பாஜகவின் ஐந்து மாவட்டங்களுக்கு புதிதாக மாவட்ட பார்வையாளர்களை நியமித்து, அக்கட்சியின் மாநில தலைவர் அண்ணாமலை அறிவிப்பை வெளியிட்டுள்ளார்.

இதுகுறித்த அவரின் அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுருப்பதாவது, "தமிழக பாரதிய ஜனதா கட்சியின் கீழ்கண்ட மாவட்டங்களுக்கு புதிதாக மாவட்ட பார்வையாளர்கள் நியமனம் செய்யப்படுகிறார்கள்.

ராமநாதபுரம் மாவட்டத்திற்கு முரளிதரன் 
செங்கல்பட்டு தெற்கு மாவட்டத்திற்கு ரவி 
கிருஷ்ணகிரி கிழக்கு மாவட்டத்திற்கு வெங்கடேசன் 
சேலம் மேற்கு மாவட்டத்திற்கு வரதராஜன் 
தர்மபுரி மாவட்டத்திற்கு முனிராஜ் நியமிக்கப்படுகிறார்கள்.

இவர்களின் பணிகள் சிறக்க வாழ்த்துக்கள்" என்று, அண்ணாமலை அந்த  அறிவிப்பில் தெரிவித்துள்ளார்.

வருகின்ற நாடாளுமன்ற பொது தேர்தலை முன்னிட்டு, தமிழக பாஜகவில் பல்வேறு அதிரடி மாற்றங்களை, அக்கட்சியின் மாநில தலைவர் அண்ணாமலை மேற்கொண்டு வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

TN BJP Annamalai announce 09042023


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->