இதெல்லாம் உங்க அடிபொடிகளிடம் வச்சுக்கோங்க.. அமைச்சர் கீதா ஜீவனுக்கு அண்ணாமலை எச்சரிக்கை.!! - Seithipunal
Seithipunal


தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டிக்கு திமுக துணை பொதுச்செயலாளரும் நாடாளுமன்ற உறுப்பினருமான கனிமொழி மற்றும் அமைச்சர் கீதா ஜீவன் ஆகியோர் அரசு நிகழ்ச்சியில் கலந்து கொள்வதற்காக சென்றிருந்தனர். அப்போது பாஜக கவுன்சிலர் விஜயகுமார் என்பவர் அவருடைய வார்டில் நான்கரை ஆண்டுகளாக குடிநீர் பிரச்சனை இருப்பது குறித்து கனிமொழியிடம் மனு அளிக்க முயன்ற போது இது குறித்து விளக்கம் அளிக்க முயன்றார். 

அப்போது அமைச்சர் கீதா ஜீவன் பாஜக கவுன்சிலரை பேசவிடாமல் தடுத்ததோடு அங்கிருந்து அப்புறப்படுத்த முயன்று உள்ளார். மேலும் பாஜக கவுன்சிலரை ஒருமையில் பேசிய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இது குறித்தான செய்தி வெளியான நிலையில் தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை அமைச்சர் கீதா ஜீவனின் செயலுக்கு கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.

இது குறித்து அவர் தனது ட்விட்டர் பக்கத்தில் "கோவில்பட்டி நகராட்சி இருபதாவது வார்டு உறுப்பினராக இருப்பவர் பாஜகவின் திரு. விஜயகுமார் அவர்கள். கடந்த நான்கரை வருடங்களாக அவரது பகுதியில் குடிநீர் பிரச்சினை உள்ளது என்றும், அவர் நகராட்சி உறுப்பினராகத் தேர்ந்தெடுக்கப்பட்ட பின்னர், கடந்த ஒன்றரை வருடங்களாக பல மனுக்கள் கொடுத்தும் இன்னும் தீர்வு கிடைக்கவில்லை என்றும், தூத்துக்குடி தொகுதி திமுக பாராளுமன்ற உறுப்பினர் திருமதி கனிமொழி அவர்களிடம் மனு கொடுக்க முயற்சித்திருக்கிறார். 

தேர்ந்தெடுக்கப்பட்ட மக்கள் பிரதிநிதியான சகோதரர் விஜயகுமார் அவர்களை, திமுக அமைச்சர் கீதா ஜீவன் தகாத வார்த்தைகள் கூறி அவமானப்படுத்தியிருக்கிறார். திமுக உள்கட்சி அரசியலில், தன்னை கட்சி மேலிடத்துக்கு நெருக்கமானவராகக் காட்டிக் கொள்ள வேண்டிய கட்டாயத்தில் உள்ள அமைச்சர் கீதா ஜீவன், இந்த ஆணவத்தை எல்லாம் அவரது அடிப்பொடிகளிடம் வைத்துக் கொள்ள வேண்டும்.

பொதுமக்கள் பிரச்சினைக்காக, பாராளுமன்ற உறுப்பினரிடம் மனு கொடுப்பதைத் தடுக்க நீங்கள் யார்? ஒரு வார காலத்திற்குள் அந்தப் பகுதியின் குடிநீர் பிரச்சினை தீர்க்கப்படவில்லை என்றால் தமிழ்நாடு பாஜக தூத்துக்குடி வடக்கு மாவட்டத் தலைவர் தலைமையில் மாபெரும் போராட்டம் நடைபெறும் என்பதைத் தெரிவித்துக் கொள்கிறேன்" என எச்சரித்து பதிவிட்டுள்ளார்

 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

Tn BJP Annamalai warns DMK minister Geetha Jeevan


கருத்துக் கணிப்பு

மத்திய அரசின் பட்ஜெட் அறிவிப்புகள்!



Advertisement

கருத்துக் கணிப்பு

மத்திய அரசின் பட்ஜெட் அறிவிப்புகள்!




Seithipunal
--> -->