விடுபட்ட மகளிருக்கு 3 மாதத்தில் மகளிர் உரிமைத் தொகை! அமைச்சர் தங்கம் தென்னரசு பேட்டி!
Mahalir Urimai Thogai Thangam Thennarasu
விடுபட்ட மகளிருக்கு 3 மாதத்தில் கலைஞர் மகளிர் உரிமைத் தொகை வழங்கப்பட உள்ளதாக, விருதுநகரில் இன்று செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் தங்கம் தென்னரசு தெரிவித்துள்ளார்.
மேலும் அவரின் பேட்டியில், "கலைஞர் மகளிர் உரிமைத் திட்டத்திற்கு ஏராளமானவர்கள் விண்ணப்பித்துள்ளனர். இன்னும் 3 மாதங்களில் இந்த விண்ணப்பங்கள் பரிசீலனை செய்யப்பட்டு, தகுதியானவர்களுக்கு நிதியுதவி வழங்கப்படும்" என்றார்.
துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் சட்டசபையில் உரையாற்றியபோது, "மகளிர் உரிமைத் தொகை திட்டத்தில் புதிய விண்ணப்பங்களை ஏற்கும் செயல்பாடு தொடங்கப்பட்டுள்ளது. கடந்த ஒரு ஆண்டில் மட்டும் ரூ.21 கோடி மானியம் வழங்கப்பட்டுள்ளது" என்று தெரிவித்தார்.
English Summary
Mahalir Urimai Thogai Thangam Thennarasu