“உத்தம சிகாமணி” CM ஸ்டாலின்... திமுக அமைச்சர் பதவி பறிப்பு? பாஜக போட்ட டிவிட்!
TN BJP Condemn to DMK MK Stalin Ponmudi
தமிழநாடு பாஜக விடுத்துள்ள செய்திக்குறிப்பில், "திமுக போன்ற குடும்ப கட்சிகளில் துணை பொது செயலாளருக்கும் சரி அடிப்படை உறுப்பினருக்கும் சரி, அதிகாரம் என்பது சூனியம் தான்!
இந்நிலையில், மனித மாண்புகளுக்கு எந்த விதமான யோக்கியத்தையும் இல்லாத பொன்முடியை வெறும் பொறுப்பு-நீக்கம் செய்வதோடு முடிந்துவிடாது உங்கள் அடிப்படை நேர்மையை நிரூபிக்கும் இடம்.
பெண்களை இழிவு செய்ததோடு தமிழகத்தின் பழம்பெருமைமிக்க அடையாளமாகவும், தமிழ் மொழியை வளம் கொழிக்க வைத்த சைவ - வைணவ சமயங்களையும், அதன் புனித அடையாளங்களையும் எவ்வளவு இழிவுபடுத்திப் பேச முடியுமோ அந்த அளவுக்கு கொச்சைப்படுத்தி பேசியுள்ள பொன்முடி அதிகாரமிக்க ஒரு அமைச்சராக நீடிப்பது பேரவலம் இல்லையா?
மேலும், தொடர் ஈனப்பேச்சாளன் சிவாஜி கிருஷ்ணமூர்த்தி போன்ற கீழ் மட்ட நிர்வாகிகளையே நீக்குவதுபோல் நீக்கிவிட்டு சில வாரங்களிலேயே மறுவாழ்வு கொடுக்கும் திமுக, பொன்முடி போன்ற முதலைகளை பொறுப்பு-நீக்கம் செய்வதெல்லாம் அப்பட்டமான கண் துடைப்பு நாடகம் என்று மக்கள் அறிவார்கள்!
பொன்முடியை அமைச்சர் பதவியிலிருந்து உடனடியாக நீக்குவது மட்டுமே நீங்கள் திராணியுள்ள தலைவர் மற்றும் மாண்புள்ள முதல்வர் என்பதை நிரூபிக்கும்!
மற்ற அறிவிப்புகளெல்லாம் உங்கள் பலவீனத்தின் எடுத்துக்காட்டே" என்று தெரிவித்துள்ளது.
English Summary
TN BJP Condemn to DMK MK Stalin Ponmudi