இஸ்லாமிய மத அடிப்படைவாத சக்திகளால் ஹிந்துக்கள் மீதான தாக்குதல்! 'ஐயோ பாவம் வங்காளதேசம்' காங்கிரஸின் வங்காள தேச பாசம் கொடூரமானது - பாஜக கண்டனம்! - Seithipunal
Seithipunal


இஸ்லாமிய மத அடிப்படைவாத சக்திகளால் ஹிந்துக்கள் மீதான தாக்குதல் நடக்கும் நிலையில், 'ஐயோ பாவம் வங்காளதேசம்' என காங்கிரஸின் வங்காள தேச பாசம் கொடூரமானது என பாஜக மாநில துணை தலைவர் நாராயணன் திருப்பதி கண்டனம் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்த அவரின் செய்திக்குறிப்பில், "வங்காள தேசத்திற்கு 25 ஆண்டுகளுக்கு 1496 மெகாவாட் மின்சாரத்தை ஜார்கந்த் மாநிலம் கோடாவிலிருந்து அளிக்க 2017ம் ஆண்டு அதானி நிறுவனம் ஒப்பந்தம் ஏற்படுத்தி கொண்டது. இந்த திட்டத்திலிருந்து உற்பத்தியாகும் அனைத்து மின்சாரமும் வங்காளதேசத்திற்கு அனுப்பப்படும். கடந்த ஜூலை 2023ம் ஆண்டு முதல் உற்பத்தி துவக்கப்பட்டு வங்காளதேசத்திற்கு மின் விநியோகம் செய்யப்பட்டு வருகிறது.

கடந்த சில மாதங்களாக வங்காளதேசத்தில் நிலவி வரும் பதற்றமான சூழ்நிலையில் அங்கு ஆட்சி மாற்றம் ஏற்பட்டதோடு, அடிப்படைவாதம் தலைதூக்கி வருகிறது. ஹிந்துக்கள் தாக்கப்படுவதோடு, ஹிந்து கோவில்கள் கடுமையாக தாக்கப்படுகின்றன. வளர்ந்து வரும் பொருளாதாரத்தை தேவையில்லாமல் சீரழித்துக்கொண்டிருக்கிறது அந்த நாடு. 

இந்நிலையில், கடந்த சில மாதங்களாக வாங்கிய மின்சாரத்திற்கு கட்டணத்தை செலுத்தாமல் தாமதித்து வருகிறது. ஆகையால், கடந்த சில மாதங்களாக மொத்த திறனில் பாதி அளவான 700 மெகாவாட் மட்டுமே உற்பத்தி செய்து விநியோகம் செய்து வருகிறது அதானி நிறுவனம்.

இன்றைய தேதியில் சுமார் 7200 கோடி ரூபாய் நிலுவை உள்ள நிலையில், வருகிற 7ம் தேதிக்குள் பணம் செலுத்தவில்லையென்றால், மின்சார விநியோகத்தை துண்டித்து விடுவதாக அதானி நிறுவனம் கூறியுள்ள நிலையில், இன்று மொத்த தொகையையும் 7ம் தேதிக்குள் செலுத்தி விடுவதாக உறுதியளித்துள்ளது வங்காளதேச அரசு. 

மேலும், NTPC, Power Grid,உள்ளிட்ட பல்வேறு இந்திய அரசு  நிறுவனங்களுக்கு பல நூறு கோடி ரூபாய் நிலுவை செலுத்த வேண்டிய நிலையில், அனைத்து நிறுவனங்களும் தங்களின் உற்பத்தியை நிறுத்தி, விநியோகத்தை துண்டித்து விடும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளது.

ஆனால், இது வரையில் பணம் செலுத்தாத வங்காளதேசம் தற்போது பணத்தை செலுத்தி விடுவதாக கெஞ்சிக்கொண்டிருக்கிறது. வங்காளதேசம் நிலுவை செலுத்தாது இருப்பதை விட மிக கொடுமையானது என்னவென்றால், காங்கிரஸ் கட்சியின் செய்தி தொடர்பாளர்  ஒருவர், 'ஐயோ பாவம் வங்காளதேசம்' என்று அலறுவது தான்! இஸ்லாமிய மத அடிப்படைவாத சக்திகளால் ஹிந்துக்கள் மீதான தாக்குதல் நடைபெற்று வரும் வரும் காங்கிரஸ் கட்சியினரின் வங்காள தேச பாசம் கொடூரமானதாக உள்ளது" என்று நாராயணன் திருப்பதி தெரிவித்துள்ளார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

TN BJP Leader condemn to Congress for Bangladesh Power issue hindu muslim issue


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->