திருச்சியில் பாஜக டெபாசிட் இழக்கும்.. வெடித்தது உட்கட்சி பூசல்.. எச்சரிக்கும் முக்கிய புள்ளி.!!
TN BJP OBC morcha Trichy surya against BJP dicision
தமிழ்நாட்டில் மக்களவைத் தேர்தலுக்கான வேட்பு மனு தாக்கல் இன்று தொடங்கியது. இதனால் தமிழ்நாட்டின் பிரதான கட்சிகளான திமுக மற்றும் அதிமுக தங்களின் வேட்பாளர் பட்டியலை வெளியிட்டுள்ளது.
திமுக களமிறங்கும் 21 தொகுதிகளுக்கான வேட்பாளர் பட்டியல் வெளியிடப்பட்டுள்ள சூழலில் அதிமுக சார்பில் போட்டியிடும் 16 வேட்பாளர்களின் பட்டியல் முதற்கட்டமாக வெளியிடப்பட்டுள்ளது.
அதைவேளையில் தமிழ்நாட்டில் பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணியில் அங்கங்க வைக்கும் அரசியல் கட்சிகள் உடனான தொகுதி பங்கீடு இறுதிச் செய்யப்பட்டு அதற்கான ஒப்பந்தம் போடப்பட்டு வரும் சூழலில் தமிழக பாஜகவில் புதிய சர்ச்சை வெடித்துள்ளது.
திமுக நாடாளுமன்ற உறுப்பினர் திருச்சி சிவாவின் மகன் சூர்யா சிவா, பாஜகவின் ஓ.பி.சி பிரிவு மாநில பொதுச் சயலாளராக இருந்து வருகிறார்.
இவர் தனது சமூக வலைதள பக்கத்தில் "வேடந்தாங்கல் பறவைகள் வேண்டாம் என்ற தலைப்பில் "மண்ணின் மைந்தரை களம் இறங்குங்கள். வருகிற நாடாளுமன்றத் தேர்தலில் திருச்சிக்கு அறிமுகம் இல்லாத வெளி மாவட்டத்தை சேர்ந்த ராம ஸ்ரீனிவாசனை திருச்சியில் களம் இறக்கினால் பாஜக டெபாசிட் இழக்கும்.
வெற்றியை நினைத்துக் கூட பார்க்க முடியாது. மாறாக மண்ணின் மைந்தரை களம் இறக்கினால் திருச்சியில் பாஜகவுக்கு வெற்றி வாய்ப்பு பிரகாசமாக உள்ளது. பாஜகவின் உண்மையான தொண்டன் திருச்சி சிவா" என பதிவிட்டுள்ளார். இதன் மூலம் பாஜகவில் புதிதாக உட்கட்சி பூசல் வெடித்துள்ளது.
English Summary
TN BJP OBC morcha Trichy surya against BJP dicision