ஒரே நாடு ஒரே தேர்தல் அவசியமாகும் - தமிழக பாஜக கருத்து.! - Seithipunal
Seithipunal


ஒரே நாடு ஒரே தேர்தல் அவசியமானது  என தமிழக பா.ஜ.க. கருத்து தெரிவித்துள்ளது.

ஒரே நாடு ஒரே தேர்தல் குறித்து தமிழக பாஜக செய்தி தொடர்பாளர் நாராயணன் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்திருப்பதாவது,

நாடாளுமன்றம் மற்றும் சட்டமன்றத் தேர்தல்கள் ஒரே நேரத்தில் நடத்துவது குறித்து மத்திய பாஜக அரசு வலியுறுத்தி வருகிறது. அதன்படி ஒரே நாடு ஒரே தேர்தல் புதியதாக உருவாக்கப்பட்டவை அல்ல. இதுபோன்ற தேர்தல்கள் கடந்த காலங்களில் நடைபெற்றுள்ளது.

அந்த வகையில் இந்தியா குடியரசு ஆனதற்கு பிறகு 4 தேர்தல்கள் (1951, 1957, 1962, 1967) நாடாளுமன்றம் மற்றும் சட்டப்பிரிவு தேர்தல் நடைபெற்றது குறிப்பிடத்தக்கது. அதன் பின்னர் சில மாநில அரசுகள் கலைக்கப்பட்ட காரணத்தாலும், 1970 ஆம் ஆண்டு முன்கூட்டியே நாடாளுமன்றம் கலைக்கப்பட்ட பிறகு இந்த முறை வழி தவறி போனது.

ஒரே நாடு ஒரே தேர்தல் வீண் செலவுகளை தவிர்க்கும் வகையிலும் தேர்தல் சீர்திருத்தங்களை செய்ய வேண்டிய உள்ளது. எனவே நாம் ஒரே நாடு ஒரே தேர்தல் என்பதை ஏற்றுக்கொள்ள வேண்டும். ஒவ்வொரு தேர்தலுக்கும் வாக்காளர் பட்டியல் மற்றும் அரசியல் முறைகேடுகளை நீக்க வேண்டும் என்றால் ஒரே நாடு ஒரே தேர்தல் அவசியமானதாகும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

TN BJP speech about one nation one election


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->