தமிழக பட்ஜெட் தாக்கல் 2022 : சென்னை மக்களுக்கு மகிழ்ச்சியான செய்தி.. நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன் அறிவிப்பு.!!
TN Budget 2020 in Chennai
தமிழக சட்டமன்றத்தில் பட்ஜெட் கூட்டத் தொடர் இன்று தொடங்குகிறது. முக ஸ்டாலின் தலைமையில் திமுக ஆட்சி பொறுப்பேற்ற முழு பட்ஜெட் இன்று நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன் தாக்கல் செய்தார்.
கடந்த ஆண்டு இடைக்கால பட்ஜெட்டை தாக்கல் செய்தது போலவே இந்த முறையும் காகிதம் இல்லாத பட்ஜெட்டை தாக்கல் செய்தார். செயின்ட் ஜார்ஜ் கோட்டை கோட்டையில் முதல் முறையாக காகிதமில்லா பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டது.
காலை 10 மணிக்கு தமிழக பட்ஜெட் கூட்டத்தொடர் தொடங்கியது. திருக்குறள் உடன் அவையை தொடக்கி வைத்தார் சபாநாயகர் அப்பாவு. நிதியமைச்சர் பழனிவேல்ராஜன் 2022 - 2023 ஆம் ஆண்டுக்கான முழு பட்ஜெட்டை தாக்கல் செய்து பட்ஜெட்டில் உள்ள முக்கிய அம்சங்களை வாசித்து வருகிறார்.
நாட்டின் வளர்ச்சியில் தமிழ்நாடு அரசின் பங்களிப்பு 10% ஆக உள்ளது. தமிழ் மொழியை போற்றி உலகெங்கும் பரவ செய்வதே திமுக அரசின் முதன்மையான குறிக்கோள்; திராவிட மாடலின் இலக்கணமாக முதலமைச்சர் திகழ்கிறார்.
தந்தை பெரியாரின் சிந்தனைகள் அடங்கிய தொகுப்பு 27 மொழிகளில் அச்சிடப்படும். சமூக நலத்திட்டங்களுக்கும், பொருளாதார வளர்ச்சிக்கும் சரிசமமான முக்கியத்துவம். முதலமைச்சரின் ஒவ்வொரு சிந்தனையிலும் செயலிலும் சுய மரியாதை, சமூகநீதி, சமூக நல்லிணக்கம் மற்றும் அனைவரும் உள்ளடக்கிய வளர்ச்சி ஆகிய திராவிட கொள்கைகள் நிறைந்திருக்கின்றன.
அரசு நிலங்களை பாதுகாக்கவும் ஆக்கிரமிப்புகளை அகற்றவும் சிறப்பு நிதியாக ரூ.50 கோடியும், வெள்ள தடுப்பு பணிகளுக்காக ரூ.500 கோடியும் ஒதுக்கீடு செய்யப்படுகிறது. தமிழ் மொழி தொடர்பாக அகரமுதலி திட்டத்திற்கு ரூ.2 கோடி ஒதுக்கீடு செய்யப்படுகிறது.
வானிலையை கணிக்க புதிய தொழில்நுட்பங்கள் கொண்ட கட்டமைப்பை உருவாக்க ரூ.10 கோடி ஒதுக்கீடு செய்யப்படுகிறது. போதை பொருட்களை ஒழிக்க அரசு தொடர் நடவடிக்கை மேற்கொண்டு வருகிறது. சமூக வலைத்தளங்களில் ஏற்படும் குற்றங்களை தடுக்க சமூக ஊடக சிறப்பு மையம் அமைக்கப்படும்.
சமூக பாதுகாப்பு ஓய்வூதிய திட்டங்களுக்காக ரூ.4,816 கோடி ஒதுக்கீடு செய்யப்படுகிறது. விழுப்புரம் மாவட்டம் ராமநாதபுரத்தில் புதிய அருங்காட்சியகம் அமைக்க ரூ.10 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்படுகிறது. சென்னையில் வெள்ளத்தால் ஏற்படும் பாதிப்பை தடுக்கும் பணிக்காக இந்தாண்டு ரூ.500 கோடி ஒதுக்கீடு செய்யப்படும்.
தமிழகம் முழுவதும் உள்ள பழமையான அரசு கட்டடங்களை சீரமைக்க ரூ.50 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்படும். ஏரிகள், ஆறுகள் உள்ளிட்ட உள்கட்டமைப்புகள் மூலம் நிலத்தடி நீரை சேமிக்க ரூ. 2787 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்படும்.
டெல்டா கடைமடை பகுதிகள் வரை தூர்வாரும் பணிகளுக்கு ரூ.80 கோடி நிதி ஒதுக்கீடு. காவிரி நீர் வடிநில பகுதிகளை சீரமைக்க ரூ.3384 கோடி ஒதுக்கீடு செய்யப்படும்.
English Summary
TN Budget 2020 in Chennai