தமிழக பட்ஜெட் இன்று தாக்கல்.. திமுக வாக்குறுதிகள் இடம் பெறுமா.?
Tn Budget 2022 to 2023
தமிழக சட்டமன்றத்தில் பட்ஜெட் கூட்டத் தொடர் இன்று தொடங்குகிறது. 2022 - 2023 ஆம் ஆண்டுக்கான பட்ஜெட்டை சட்டமன்றத்தில் நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன் இன்று காலை தாக்கல் செய்கிறார். முக ஸ்டாலின் தலைமையில் திமுக ஆட்சி பொறுப்பேற்ற பிறகு தாக்கல் செய்யப்படும் முழுமையாக பட்ஜெட் இதுவாகும். இந்த ஆண்டும் காகிதமில்லா பட்ஜெட் தாக்கல் செய்யப்படுகிறது.
இதனால் சட்டப்பேரவையில் நிதியமைச்சர் பட்ஜெட்டை தாக்கல் செய்து வாசிக்கும்போது, எம்எல்ஏக்கள் இருக்கைகளும் முன்பாக வைக்கப்பட்டிருக்கும் லேப்டாப்பில் பட்ஜெட் விவரங்கள் பார்க்க வசதி செய்யப்பட்டுள்ளது. பட்ஜெட் தாக்கலை எல்லாரும் பார்க்கும் வகையில் சட்டப்பேரவையில் பெரிய திரையில் ஒளிபரப்ப ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
இன்று தாக்கல் செய்யப்படும் பட்ஜெட்டில் திமுக தேர்தல் அறிக்கையில் சொன்ன வாக்குறுதிகளை இடம்பெறும் என எதிர்பார்க்கப்படுகிறது. குறிப்பாக குடும்ப தலைவிகளுக்கு மாதம் ஆயிரம் ரூபாய் வழங்கும் அறிவிப்பு இடம்பெறும் என மக்கள் மத்தியில் கேள்வி எழுந்துள்ளது. பட்ஜெட் தாக்களுக்கு பின்னர், பிற்பகல் அலுவல் ஆய்வுக் கூட்டம் நடைபெறும். பட்ஜெட் கூட்டத்தொடர் எத்தனை நாட்கள் நடத்துவது என்பது குறித்து அதில் முடிவு செய்யப்படுவது.
தமிழக சட்டப்பேரவையில் நாளை வேளாண் பட்ஜெட் தாக்கல் செய்யப்படுகிறது. வேளாண் பட்ஜெட் அமைச்சர் எம் ஆர் கே பன்னீர்செல்வம் தாக்கல் செய்கிறார். இதில் விவசாயிகளுக்கு பல்வேறு அறிவிப்புகள் மற்றும் சலுகைகள் இடம் பெறும் என எதிர்பார்க்கப்படுகிறது.