ஜார்க்கண்ட் ஆளுநராகப் பொறுப்பேற்றே நண்பருக்கு  வாழ்த்துகள் - முதல்வர் ஸ்டாலின்.! - Seithipunal
Seithipunal


ஜார்க்கண்ட் மாநில ஆளுநராக தமிழகத்தை சி.பி.ராதாகிருஷ்ணனுக்கு தமிழக முதல்வர் முக ஸ்டாலின் அவர்கள் வாழ்த்து தெரிவித்துள்ளார்.

சமீபத்தில் தமிழகத்தை சேர்ந்த மேலும் ஒரு பாஜக மூத்த தலைவருக்கு ஆளுநர் பதவி வழங்க பாஜக கட்சி தலைமை ஆலோசித்து வருவதாக கூறப்பட்டது.

இந்த நிலையில் இன்று குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு 13 மாநில ஆளுநர்களை நியமித்து உத்தரவிட்டுள்ளார். அதில், தமிழக பாஜக மூத்த தலைவரான சி.பி.ராதாகிருஷ்ணன் ஜார்க்கண்ட் மாநில ஆளுநராக நியமிக்கப்பட்டுள்ளார்.

இந்த நிலையில் ஜார்க்கண்ட் மாநில ஆளுநராகப்  நியமிக்கப்பட்டுள்ள சி.பி.இராதாகிருஷ்ணன் அவர்களுக்கு தமிழக முதல்வர் மு க ஸ்டாலின் அவர்கள் தனது சமூக வலைதள பக்கத்தில் வாழ்த்து தெரிவித்துள்ளார்.

அந்த பதிவில் 'ஜார்க்கண்ட் மாநில ஆளுநராகப் புதிதாக நியமிக்கப்பட்டுள்ள நண்பர் சி.பி.இராதாகிருஷ்ணன் அவர்களுக்கு நெஞ்சார்ந்த வாழ்த்துகள்!

அரசியலமைப்புச் சட்டத்தின்படி தனது கடமைகளை நிறைவேற்றி தமிழ்நாட்டுக்குப் பெருமை சேர்த்திட விழைகிறேன்' என தெரிவித்துள்ளார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

TN CM MK Stalin wishes to jharkhand governor CB Radhakrishnan


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->